
Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: டெல்லி அணியின் இளம் வீரர் அஷுதோஷ் சர்மாவின் விக்கெட்டை நூர் அஹ்மத் வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்திருக்கிறார். நூர் அஹ்மத்திடம் வேகத்தை குறைத்து கொஞ்சம் காற்றில் பந்தை வீசுமாறு சஞ்சு சாம்சன் கூறி இருந்தார். அதற்கேற்ப நூர் அஹ்மத் வீச, சிஎஸ்கே அணி வைத்த பொறியில் அஷுதோஷ் சர்மா சிக்கினார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்களையும், ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்களையும் விளாசினர்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அதேபோல் இந்தப் போட்டியில் நட்சத்திர ஸ்பின்னர் நூர் அஹ்மத் தனது முதல் விக்கெட்டையும் இந்த சீசனில் கைப்பற்றினார். அதற்கு சஞ்சு சாம்சனின் யோசனையே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
15வது ஓவரை வீச நூர் அஹ்மத் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தில் சிக்ஸ் அடிக்கப்பட்ட நிலையில், உடனடியாக நூர் அஹ்மத்திடம் சஞ்சு சாம்சன் பேசினார். அஷுதோஷ் சர்மா பேட்டை ஓங்கி கொண்டே இருந்ததை கவனித்த சஞ்சு சாம்சன், உடனடியாக ஸ்வீப்பர் கவர் திசையில் அன்சுல் கம்போஜை ஃபீல்டிங் நிறுத்தினார்.
அதன்பின் நூர் அஹ்மத்திடம் ஆஃப் சைடில் வேகம் குறைத்து காற்றில் தூக்கி வீசுமாறு திட்டத்தை கூறினார். அந்த திட்டத்தை அப்படி நூர் அஹ்மத் செயல்படுத்த, அஷுதோஷ் சர்மா அடித்த பந்து நேராக அன்சுல் கம்போஜ் கையில் விழுந்தது. அதற்கு முந்தைய பந்தில் 95கிமீ வேகத்தில் வீசிய பந்தில் அஷுதோஷ் சர்மா சிக்ஸ் அடித்திருந்தார். இதன் மூலமாகவே இந்த விக்கெட் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தது.
இதனால் சிஎஸ்கே அணி ஒற்றுமையுடன் செயல்பட்டதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தொடர்ச்சியாக ஆலோசித்து பவுலிங் மாற்றம் மற்றும் ஃபீல்டிங்கை மாற்றி வருகின்றனர். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் செய்யும் தவறுகளும் குறைந்திருக்கிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-sanju-samson-plan-helped-noor-ahmed-to-dismiss-ashutosh-sharma-which-is-to-be-the-firs-789213.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
