சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர்.. கொந்தளித்த ரசிகர்கள்.. காவ்யா மாறன் தரப்பு கொடுத்த விளக்கம்! | Kavya Maran: Sunrisers Hyderabad Owner Kavya Maran facing heavy backlash after buy Pakistan Player Abrar Ahmed for the Sunrisers Leeds team in the Hundred Leage

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: தி ஹன்ட்ரட் லீக் தொடரில் காவ்யா மாறன் முதலீடு செய்திருக்கும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுதொடர்பாக அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி விளக்கம் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் தி ஹன்ட்ரட் லீக் தொடரில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று அம்பானி, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்டோர் பல்வேறு அணிகளின் பங்குகளை வாங்கினர். இதன் காரணமாக அந்தந்த அணிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது.

Kavya Maran

அதாவது நார்த்தென் சூப்பர்சார்ஜர்ஸ் என்ற அணியின் மீது சன் டிவி குழுமம் முதலீடு செய்தது. இதன் காரணமாக அந்த அணியின் பெயர் சன்ரைசர்ஸ் லீட்ஸ் என்ற மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்திய உரிமையாளர்கள் முதலீடு செய்திருப்பதால், பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க கூடாது என்ற சில தரப்பு பேசத் தொடங்கியது.

இதற்கு இங்கிலாந்து வீரர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதன்பின் தி ஹன்ட்ரட் லீக் ஏலத்தில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதன்பின் நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி தரப்பில் பாகிஸ்தான் அணியின் அப்ரார் அஹ்மத் வாங்கப்பட்டார். இந்திய உரிமையாளர்கள் வாங்கியுள்ள வேறு எந்த அணியும் பாகிஸ்தான் வீரரை ஒப்பந்தம் செய்யவில்லை.

இதனால் சோசியல் மீடியாவில் காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் எக்ஸ் தளமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி அப்ரார் அஹ்மத் வாங்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கமாக கொடுத்துள்ளார்.

அதில், இங்கிலாந்து அணியின் அடில் ரஷீத்தை வாங்க முயற்சித்தோம். ஆனால் அவர் பெரிய விலைக்கு வேறு அணியால் வாங்கப்பட்டார். அதனால் அந்த இடத்திற்கு வெளிநாட்டு ஸ்பின்னரை வாங்க வேண்டிய சூழல் வந்தது. அதனால் அப்ரார் அஹ்மத்தை வாங்கினோம் என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் ரசிகர்கள் பலரும் காவ்யா மாறனை கடுமையாக சாடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் உஸ்மான் தாரிக் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷாகீன் அப்ரிடி ஏலத்தில் கூட பங்கேற்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதமாக மாறி இருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/kavya-maran-sunrisers-hyderabad-owner-kavya-maran-facing-heavy-backlash-after-buy-pakistan-player-a-780973.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo