
Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகவும் இது வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் வளைகுடா மோதல் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்தது. இதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் 15,000 ரூபாயைத் தாண்டிய ஆபரணத் தங்கம் விலை இப்போது ரூ.14,000க்கு கீழ் போனது. கச்சா எண்ணெய் வர்த்தக பாதிப்பு காரணமாக டாலர் மதிப்பு உயர்வதே இதற்குப் பிரதான காரணமாகும்.

தங்கம் விலை
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இருப்பினும், அது சீராக ஏறவில்லை. ஒரு நாள் ஏறினால் அடுத்த நாள் குறைவது என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் மேலும், “தங்கம் விலை இரவு நேரத்தில் ஏறுகிறது. காலை வந்தால் குறைகிறது. கடந்த ஒரு வாராகவே இந்த டிரெண்ட் தான் இருக்கிறது. ஏனென்றால் டிரம்ப் நைட் வந்தால் போர் நிறுத்தம் என்கிறார். காலை வந்தால் வெடிகுண்டு போட்டுத் தாக்குவேன் என்கிறார்.. இதனால் பங்குச்சந்தையும் அதேபோலத் தான் செல்கிறது. காலை ஒரே ரேட் மாலை ஒரே ரேட் என்றே இருக்கிறது.
போர் நிறுத்தம் வரும் என்றால் மார்கெட் ஏறுகிறது. போர் என்று தகவல் வந்தால் பங்குச்சந்தை சரிகிறது.. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.255 என்கிறார்கள். ஆனால், இதை நம்பவே நம்பாதீர்கள்.. பியூச்சர்ஸ் மார்கெட்டிலேயே 233க்கு தான் இருக்கிறது. அதேபோல டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு காலையிலேயே 93ஐ தாண்டிவிட்டது.. இப்போது 92-93 என இருக்கிறது. பிரண்ட் கச்சா எண்ணெய் 109இல் இருக்கிறது. ஷேர் மார்கெட் இதுபோல ஏறி இறங்குகிறது. இதுபோன்ற நேரத்தில் குறைந்த மதிப்புகள் நல்ல பங்குகளை நாம் வாங்கிக் கொள்ளலாம்.
உலக நாடுகள்
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறது. போலாந்து நாட்டின் மத்திய வங்கி சமீபத்தில் தான் 20 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. நடுவில் சில காலம் தங்கம் விலை குறைந்தால் அது எங்களுக்கு வாங்கும் ஒரு வாய்ப்பாகவே இருக்கும். மற்ற நாடுகளும் இதையே தான் சொல்கிறது. தங்கம் இறக்குமதியில் ஒரு சில வணிகர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதால் அதில் பெரிய ஏற்ற இறக்கம் இருப்பதில்லை எனச் சிலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கம் விலை எகிறும்
பல சர்வதேச காரணங்களால் மார்க்கெட் ரொம்ப பலவீனமாக இருக்கிறது. தங்கம் விலையும் இதனால் பலவீனமாக இருக்கிறது. எனவே, தங்கத்தை வாங்க இது உங்களுக்குச் சரியான ஒரு வாய்ப்பை கொடுக்கும். மெல்ல மெல்லத் தங்கத்தை வாங்கலாம். போர் நின்றுவிட்டது என்றால் தங்கம் விலை உடனே ஏற ஆரம்பித்துவிடும்” என்றார்.
ஆனந்த் சீனிவாசன் சொன்னது போலவே போர் முடிவுக்கு வருவதாக அதிகாலையில் அறிவிப்பு வந்தது. அந்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், தங்கம் விலை மளமளவென உயர்ந்தது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/anand-srinivasan-says-gold-rate-will-immediately-start-to-raise-once-the-middle-east-crisis-ends-787997.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
