சிஎஸ்கே கேப்டனாகும் சஞ்சு சாம்சன்.. அந்த சம்பவம் மட்டும் நடந்தால்! ருதுராஜ் எச்சரிக்கையா இருக்கணும் | Sanju Samson: CSK management picks Sanju Samson not only as a Successor of MS Dhoni, also as Captain Material if Ruturaj Missed a Match in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகும் பட்சத்தில், அந்த பொறுப்பை சஞ்சு சாம்சன் ஏற்பார் என்று பார்க்கப்படுகிறது. கடந்த சீசனின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய போது, வேறு வழியின்றி தோனி கேப்டன்சியை ஏற்க வேண்டிய சூழல் வந்தது. இனி அந்த பிரச்சனை இருக்கப் போவதில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் சூழலில், சிஎஸ்கே அணி தரப்பில் மார்ச் 22ஆம் தேதி பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிஎஸ்கே ஜாம்பவான்கள் மற்றும் ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரி உள்ளிட்டவை நடக்க உள்ளது. அப்போது சிஎஸ்கே அணியுடன் சஞ்சு சாம்சனும் இணைவார் என்று தெரிய வந்துள்ளது.

Sanju Samson

சஞ்சு சாம்சனின் அறிமுக நிகழ்ச்சியாகவும் இது அமைந்துள்ளது. இதனிடையே சஞ்சு சாம்சன் கேப்டனாகவும் சிஎஸ்கே அணி பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, திடீரென மிட் சீசனில் விலகி கொண்டார். அப்போது மீண்டும் தோனி கேப்டன்சியை ஏற்க வேண்டிய சூழல் வந்தது. தொடர்ந்து கடந்த சீசனில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகினார்.

அப்போது பொறுப்பு கேப்டனாக தோனி நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி வாங்க நினைத்திருக்கிறது. அப்போது சஞ்சு சாம்சன் அணுகப்பட்ட போது, அவரும் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறார். இதன்பின் இறுதியாக ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை வாங்கியது.

அதேபோல் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரையும் ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்தது. இதன் மூலமாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்படாத துணைக் கேப்டனாக களத்தில் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியை 5 சீசன்களில் வழிநடத்திய அனுபவம் சஞ்சு சாம்சனிடம் இருக்கிறது.

அதேபோல் விக்கெட் கீப்பர் என்பதால் சில போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் வசம் விக்கெட் கீப்பிங் பொறுப்பு அளிக்கப்படலாம். அப்போது ருதுராஜ் கெய்க்வாட் – சஞ்சு சாம்சன் கூட்டணி இணைந்து பல்வேறு முடிவுகளை எடுக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதன் மூலமாக ருதுராஜ் கெய்க்வாட்டும் எளிதாக சிஎஸ்கே அணியை வழிநடத்த முடியும்.

அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அப்போது கேப்டன்சி சஞ்சு சாம்சன் வசம் அளிக்கப்படலாம். மேலும் இந்த சீசனிலேயே சில போட்டிகளில் சஞ்சு சாம்சனிடம் பொறுப்பை கொடுத்து தோனி கொஞ்சம் விலகி இருப்பார் என்றும் பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-csk-management-picks-sanju-samson-not-only-as-a-successor-of-ms-dhoni-also-as-captain-782185.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo