சேட்டன் வந்தல்லே.. சேட்டை செய்ய வந்தல்லே! கோலியை காலி செய்த சஞ்சு சாம்சன்! டி-20 உலக கோப்பையில் மாஸ் | T20 World Cup 2026: Sanju Samson Storm: Smashes 89 in T20 World Cup Final, Surpasses Virat Kohli Record

Cricket

oi-Rajkumar R

சென்னை: ஒரு சூறாவளி கிளம்பியதே என்பதைப் போல 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக இன்றைய பைனலில் சஞ்சு சாம்சன் 89 ரன்களை அதிரடியாக விளாசிய நிலையில் இந்தியா வெற்றி இலக்கை தொட உள்ளது. இந்த நிலையில் ஒரு டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன்.

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டெடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் இந்த பெரிய ஸ்கோரில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முக்கிய பங்கு வகித்தார். அவர் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 89 ரன்கள் அடித்து அணியின் ரன் வேகத்தை அதிகரித்தார்.

Sanju Samson T20 World Cup Virat Kohli

சாம்சனின் இந்த இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்ட அவர் பல அற்புதமான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவரது தாக்குதல் ஆட்டம் இந்திய அணியின் மொத்த ஸ்கோரைக் கணிசமாக உயர்த்தியது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் ஆரம்ப கட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் பின்னர் கிடைத்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான “வாழ்வா? சாவா?” போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தர முக்கிய பங்காற்றினார். அதன் பின்னர் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட போட்டியிலும் அவர் அரைசதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த தொடரில் மொத்தமாக மூன்று அரைசதங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் மொத்தமாக 321 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்னர் இந்திய அணியின் விராட் கோலி வைத்திருந்தார். ஐஅவர் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 319 ரன்கள் குவித்திருந்தார். அந்த சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 317 ரன்கள் குவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனை சாம்சனின் தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் இந்திய அணிக்கும் பெருமை சேர்த்துள்ளது. அணியில் தன்னை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-sanju-samson-storm-smashes-89-in-t20-world-cup-final-surpasses-virat-kohli-rec-779719.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo