சோலி முடிஞ்ச்.. கேப்டன்சிக்கு ருதுராஜ் கெய்க்வாட் சரியானவரா? சிஎஸ்கே அணியிலேயே எழுந்த கலகக் குரல்! | CSK: Ruturaj Gaikwad Captaincy Skill and onfield decisions are Questionable says Former CSK Player Badrinath ahead of PBKS Match at Chepauk

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமை பொறுப்புக்கு சரியானவரா என்ற கேள்வியை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் எழுப்பி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக 20 போட்டிகளில் ஆடி 8 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதாக விமர்சித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், களத்தில் சிஎஸ்கே அணியின் எனர்ஜி போதுமானதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. இதனால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் -4 என்ற நிலைக்கு சென்றது. இதனால் கடந்த சீசனை விடவும் சிஎஸ்கே அணி இன்னும் மோசமாக மாறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது.

CSK

இதற்கான சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. குறிப்பாக தோனியின் இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. பேட்டிங்கில் அசத்தினாலும் கேப்டன்சியில் சொதப்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுவரை சிஎஸ்கே அணியை 20 போட்டிகளில் வழிநடத்தி இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், வெறும் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள 12 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறார். இதுதொடர்பாக சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசுகையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மீது மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி வீரர்களிடம் ஒரு எனர்ஜியே இல்லை.

களத்தில் ருதுராஜ் எடுக்கும் முடிவுகளும் ஏற்கும்படி இல்லை. இன்னொரு பக்கம் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் ரெக்கார்ட் மோசமாக இருக்கிறது. ஆனால் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உச்சத்தில் இருக்கிறார். அவர் தலைமையில் பஞ்சாப் அணி பழுதுபார்க்கப்பட்ட இன்ஜினை போல் சிறப்பாக உள்ளது.

இளம் வீரர்களும் களத்தில் அசத்துகிறார்கள். கடந்த போட்டியில் கூட கானலி ஆட்டம் மிரட்டலாக அமைந்தது. பஞ்சாப் அணியை தடுப்பது எளிதாக விஷயம் கிடையாது. பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டும் என்றால், சிஎஸ்கே அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ருதுராஜ் கேப்டன்சி மீது பத்ரிநாத் எழுப்பியுள்ள கேள்வி விவாதமாகி இருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/csk-ruturaj-gaikwad-captaincy-skill-and-onfield-decisions-are-questionable-says-former-csk-player-b-786629.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo