
International
oi-Vigneshkumar
லண்டன்: இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்குக் கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், இந்த லிஸ்டில் இப்போது பிரிட்டனும் சேர்ந்துள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினரும் இனி பிரிட்டன் செல்ல ஆகும் செலவு அதிகரிக்கப் போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கணிசமான நபர்கள் படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அதேபோல இன்னும் பலர் சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இதுபோல வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், பல நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது.

கட்டுப்பாடு
இந்த கட்டுப்பாடுகள் இந்தியர்களை மட்டும் குறிவைத்து இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினர் வருகைக்கு இந்த நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இது நமது நாட்டினரையே மோசமாகப் பாதிக்கிறது. ஏற்கனவே, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டினருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள சூழலில், இந்த லிஸ்டில் இப்போது பிரிட்டனும் இணைந்துள்ளது.
பிரிட்டன்
இனி நீங்கள் இங்கிலாந்திற்குச் சுற்றுலா, மேற்படிப்பு அல்லது வேலை நிமித்தமாகச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்கள் பட்ஜெட்டைச் சற்று மாற்றியமைக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் பிரிட்டன் கிட்டத்தட்ட அனைத்து விசா பிரிவுகளுக்கான கட்டணங்களையும் அதிரடியாக உயர்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதலே விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அடிவரவு முறையை வலுப்படுத்தவே இந்த கட்டண உயர்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பழைய காகித முறையிலிருந்து முழுமையான டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்காக இந்த கட்டண உயர்வு அவசியமாவதாகக் கூறப்பட்டுள்ளது.. மேலும், இது எல்லையைப் பாதுகாப்பாக உதவும் என அந்நாடு அரசு தெரிவித்துள்ளது. விசா கட்டணங்கள் அனைத்தும் 6% முதல் 9% வரை உயர்த்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் முதல் துறை சார்ந்த வல்லுநர்களுக்கான விசா வரை அனைத்திற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விசா கட்டணம் உயர்வு
- சுற்றுலா விசா (6 மாதங்கள் வரை): இனி இதற்கான கட்டணம் £135 (சுமார் 17,000 ரூபாய்). இதுவே 2 ஆண்டு விசா என்றால் கட்டணம் £506 (சுமார் ரூ.63,500) ஆக உயர்ந்துள்ளது.
- மாணவர் விசா (Study Visa): மாணவர்கள் செலுத்த வேண்டிய விசா கட்டணம் £558 (சுமார் ரூ.70,000)ஆக மாற்றப்பட்டுள்ளது.
- வேலை விசா (Skilled Worker): 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் வேலை விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு £819 (சுமார் ரூ.1.02 லட்சம்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டனில் இருப்பவர்கள் இந்த விசாவை நீட்டிக்க £943 (சுமார் ரூ.1.18 லட்சம்) செலுத்த வேண்டும்.
அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளில் இருந்து பிரிட்டன் செல்வோருக்கு விசா தேவையில்லை. அவர்களிடம் இருந்து ETA எனப்படும் ‘மின்னணு பயண அங்கீகாரம்’ கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது. அதுவும் இப்போது £16இல் இருந்து £20-ஆக (சுமார் ரூ.2500) உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து
ஏற்கனவே பொருளாதாரச் சூழல் மற்றும் உள்நாட்டு அரசியல் காரணங்களால், பல நாடுகள் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. அதில் பிரதானமானது அமெரிக்கா.. டிரம்ப் கடந்தாண்டு தான் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹெச்-1பி விசா கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் விசாக்களுக்கான மிக அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா. இதனால் விசா பெறுவதற்கான விதிமுறைகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல கனடாவும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் உச்சவரம்பு விதித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/uk-visa-fees-hike-2026-new-costs-for-tourists-students-and-workers-will-it-affects-indians-789103.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
