டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் | Iran Denies Talks With US, Rejects Trump’s Ceasefire Claim Amid Rising Gulf Tensions

International

oi-Mani Singh S

தெஹ்ரான்: ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்படாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் ஈரான் இதற்கு உடனடியாக பதில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் ஊடகம் தெரிவித்து இருக்கிறது.

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய போர் இடைவிடாமல் நீடித்து வந்தது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால் கோபம் அடைந்த ஈரான், அமெரிக்காவை பழிக்கு பழி வாங்காமல் விட மட்டோம் என்று கூறி பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

Iran Denies Talks With US Rejects Trump s Ceasefire Claim Amid Rising Gulf Tensions

போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்

இதனால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை நோக்கி குண்டுமழையை ஈரான் பெய்தது. கத்தார், பஹ்ரைன், துபாயில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கத்தாரில் உள்ள உலகின் மிகபெரிய எல்.என்.ஜி ஆலை மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வான்பாதுகாப்பின் கண்ணில் மண்ணை தூவி ஈரான் குண்டு மழை பொழிந்தது.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் மூன்று வாரத்தை கடந்து சென்றது. ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்ததால், சர்வதேச அளவில் போரின் தாக்கம் உடனடியாக எதிரொலித்தது. கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்ததோடு, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் நடப்பதே வேறு எச்சரித்த டிரம்ப், இன்று 5 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

உடனே மறுத்த ஈரான்

ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போர் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் இதனால், அடுத்த 5 நாட்களுக்கு அந்த நாட்டின் மீது போர் தொடுக்கப்படாது என்றும் டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் ஈரான் இதனை மறுக்கும் விதமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஈரான் கூறுகையில், “அமெரிக்கா ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை தாக்கினால், முழு பிராந்தியத்தின் எரிசக்தி அமைப்புகளையும் இலக்காகக் கொள்ளும் என இஸ்லாமிய குடியரசு எச்சரித்ததையடுத்து, டிரம்ப் பின் வாங்கி, தாக்குதலை ஒத்திவைக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தவில்லை

அமெரிக்காவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும் ஈரான் ஊடகம் தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று டிரம்ப் கூறியதை ஆப்கானிஸ்தானில் உள்ள ஈரான் தூதரகம் மறுக்கவில்லை.

ஈரானின் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில், ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறியதாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஈரானின் ராணுவ அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நிதி சுமை அதிகரிப்பு ஆகியவை காரணமாக டிரம்ப் இதை வாபஸ் பெற்றுள்ளார். பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. உளவியல் போர் மூலம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், எரிசக்தி சந்தையை நிலைநிறுத்தவும் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-denies-talks-with-us-rejects-trumps-ceasefire-claim-amid-rising-gulf-tensions-783853.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo