டி20 உலக கோப்பை வாங்கிய கையோடு.. நேராக ஆஞ்சநேயர் கோயிலுக்கு போன சூர்யகுமார் யாதவ்- ஜெய்ஷா! | India T20 world cup victory: Jay Shah, Gambhir & Suryakumar Yadav Offer Prayers at Hanuman Temple

Cricket

oi-Vigneshkumar

சென்னை: குஜராத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றியைப் பெற்றது. இதற்கிடையே உலகக் கோப்பையை வென்ற கையோடு ஐசிசி தலைவர் ஜெய்ஷா மற்றும் கேப்டன் சூர்ய குமார் யாதவ் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 255 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் அரை சதம் அடித்தனர்.

t20 world cup 2026 Jay Shah Suryakumar Yadav 20

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து களமிறங்கியது. இருப்பினும், மிக பெரிய ரன்கள் என்பதால் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தன. 19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 159 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை நாடு முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

இதற்கிடையே இரவோடு இரவாக உலகக் கோப்பையை வென்ற கையோடு ஐசிசி தலைவர் ஜெய்ஷா மற்றும் கேப்டன் சூர்ய குமார் யாதவ் அகமதாபாத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்குக் கோப்பையை வைத்துச் சிறப்பு வழிபாடும் நடத்தியுள்ளனர். பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் அவர்களுடன் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/india-t20-world-cup-victory-jay-shah-gambhir-suryakumar-yadav-offer-prayers-at-hanuman-temple-779767.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo