“டெல்லி, மும்பை மீது குண்டு வீசுவோம்..” திமிராக பேசும் பாகிஸ்தான்! வாங்கிய அடி பத்தல போல! | Pakistan on India: We will attack Delhi and Mumbai If US Attacks us, says India as Default Target

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் ஈரான் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், மற்றொரு பக்கம் சம்பந்தமே இல்லாமல் இந்தியாவைச் சீண்டும் வகையில் பாகிஸ்தான் சில கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதாவது அமெரிக்கா தங்களைத் தாக்கினால் யோசிக்காமல் மும்பை மற்றும் டெல்லி மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்துவோம் என வாயை விட்டு இருக்கிறது பாகிஸ்தான்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல் அந்த நாடுகளைத் தாண்டி சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் கேஸ் சப்ளை பாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் கச்சா எண்ணெய் விலையும் கூட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

Pakistan on India We will attack Delhi and Mumbai If US Attacks us says India as Default Target

பகீர் கருத்து

இதற்கிடையே சம்பந்தமே இல்லாமல் இந்தியா குறித்து முன்னாள் பாகிஸ்தான் தூதரான அப்துல் பசித் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பிராந்திய பாதுகாப்பு குறித்த புதிய கவலைகளை எழுப்புவதாக இருக்கிறது.. 2014 முதல் 2017 வரை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றிய பசித், தேவையே இல்லாமல் இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார்.

அதாவது இப்போது ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாலேயே அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்குகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களைக் குறிவைத்தே இரு நாடுகளும் தாக்குதல் நடத்துகின்றன. எதிர்காலத்தில் ஒருவேளை தங்கள் அணுசக்தி திட்டத்திற்கு அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும்பட்சத்தில், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானை தாக்கினால் என்ன நடக்கும்?

பிராந்தியத்தில் நிலைமை மோசமடைவதை சுட்டிக்காட்டிய பசித், “ஈரான் நிலைமை மோசமடைந்து, இஸ்ரேல் நம்மை நெருங்குகிறது. அமெரிக்கா நமது அணுசக்தி திட்டத்தை எதிர்மறையாகக் கருதுகிறது அல்லது அழிக்க முயல்கிறது என வைத்துக் கொள்வோம். இதுபோன்ற ஒரு சூழல் வராது. சாத்தியம் குறைவு தான் என்ற போதிலும், இப்படியொரு சூழலை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பாகிஸ்தானுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் உள்ளது.

அதையும் தாண்டி பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்துகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது தூரம் காரணமாக நம்மால் நேரடியாகப் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியாது. வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்களை எங்களால் சென்றடைய முடியாமல் போகலாம். இஸ்ரேலைத் தாக்க முடியாமல் போகலாம். இதுபோன்ற சூழல்களில் எங்களுடைய ஒரே வழியாகவும் இலக்காகவும் இந்தியா இருக்கும்.

இந்தியாவைத் தாக்குவோம்

அது போன்ற ஒரு சூழல் உருவாகும்போது பாகிஸ்தான் துளி கூட யோசிக்காது. வேறு வழியே இல்லை என்ற இதுபோன்ற சூழலில் தயக்கமின்றி இந்தியாவைத் தாக்குவோம். மும்பை, டெல்லியை தாக்குவோம்.. பின்வாங்க மாட்டோம். தாக்குதலின் விளைவுகள் இரண்டாம் பட்சமே. அதை எல்லாம் அப்போது பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என இறங்கி அடித்துவிடுவோம். அதேநேரம் இது போன்ற ஒரு சூழல் உருவாக வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும் நடந்தால் என்ன செய்வோம் என்பதையே சொல்கிறேன்” என்றார்.

வாங்கிய அடி பத்தல

ஈரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பசித்தின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கினால் சம்பந்தமே இல்லாமல் இந்தியாவைத் தாக்குவோம் என பசித் கூறியிருக்கிறார். அதேநேரம் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-on-india-we-will-attack-delhi-and-mumbai-if-us-attacks-us-says-india-as-default-target-783395.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo