தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! | Russia Bans Gold Exports Above 100g from May 1 – Gold Prices to See Sharp Short-Term Drop Then Long-Term Surge

Business

oi-Prasanna Venkatesh

உலக தங்கம் விலை அடுத்த சில நாட்களில் கணிசமான ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடான ரஷ்யா மே 1 முதல் தங்க ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஈரான் போர் 2 வாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட உடன் முதலில் பலரின் கவனம் தங்கம் மீது தான் திரும்பியது. இன்று காலை முதல் தங்கம் விலை தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் அதிகப்படியான விலையில் தங்கத்தை வாங்கி வைத்தவர்கள் தங்கம் விலை உயர்வை பார்த்து நம்மதி அடைந்துள்ளனர்.

ஆனால் ரஷ்யா எடுத்த முடிவால் அடுத்த ஒரு மாதத்திற்கு தங்கத்தின் விலை குறையலாம் என கருத்து சந்தையில் நிலவுகிறது. ஆனால் மே 1ஆம் தேதிக்கு பின்பு ராக்கெட் வேகத்தில் உயரும் என கணிக்கப்படுகிறது. தங்கத்தை வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அப்படி என்ன திட்டமிட்டு வருகிறார்?

Russia Gold Russia Gold Export Ban Gold Price Fluctuation May 2026 Putin Gold Restriction Russia Gold Supply Impact Short Term Gold Price Drop 1 Russia gold export ban May 1 Putin gold export restriction 2026 Russia bans gold above 100 grams short term gold price drop Russia long term gold price rise Russia gold supply tightening Russia Russia second largest gold producer gold price fluctuation after Russia ban Turkey selling gold amid crisis gold as survival asset countries Russia domestic gold protection Ukraine war impact on gold market Western sanctions Russia gold gold price prediction next month global gold supply Russia effect 1 2026 100

ரஷ்யாவின் புதிய தடை

ரஷ்ய அதிபர் புடின் மார்ச் 25 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, மே 1 முதல் ரஷ்யாவில் இருந்து 100 கிராம் தங்கத்துக்கு மேல் யாரும் வெளி நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. தனி நபர்களாக இருந்தாலும், நிறுவனங்களாக இருந்தாலும் இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தும் என அறிவித்துள்ளார். இது ரஷ்யாவின் தங்க ஏற்றுமதியை கணிசமாக குறைப்பது மட்டும் அல்லாமல் தங்கத்திற்து தட்டுப்பாட்டை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் வர்த்தகத் தடைகள் காரணமாக ரஷ்யா தங்கத்தை தனது உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்ற பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

ரஷ்ய கஜானா

ரஷ்ய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மார்ச் மாதத்தில் ரஷ்யாவின் வருவாய் 43% குறைந்து 617 பில்லியன் ரூபிள் சுமார் 7.72 பில்லியன் டாலர் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த சரிவிற்கு முக்கிய காரணம் அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள். ரஷ்யாவின் மொத்த அரசு வருவாயில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் பங்கு சுமார் 25% ஆகும். இந்த துறையின் வருவாய் குறைவு, அரசின் நிதிநிலையை நேரடியாக பாதிக்கும்.

2025 ஆம் ஆண்டில், அதிகப்படியான ராணுவ செலவுகளின் காரணமாக ரஷ்யாவின் பட்ஜெட் பற்றாக்குறை 5.6 டிரில்லியன் ரூபிள் அல்லது GDP-இன் 2.6% ஆக உயர்ந்துள்ளது எனவும் ரஷ்ய நிதியமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

பாதுக்காப்பு முயற்சி

ஒருப்பக்கம் வருவாய் குறைந்து வரும் வேளையிஸ், கடனும், நிதி நிலையம் மோசமாகும் பட்சத்தில் தங்கத்தை வைத்து பொருளாதாரம் மற்றும் ரூபிள் நாணய மதிப்பை காப்பாற்றும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது. இதனால் தங்கம் நாட்டை விட்டு வெளியேற்றுவதை குறைத்துவிட்டு பொருளாதாரத்தை பலப்படுத்த முடிவு செய்துள்ளது புடின் அரசு.

உடனடி ரியாக்ஷன்

மே 1 தடை அமலுக்கு வருவதற்கு முன்பாக, ரஷ்யாவில் தங்கம் அதிகமாக வைத்திருக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும், கையில் இருக்கும் தங்கத்தை பணமாக்க முயற்சி செய்வார்கள். இதனால் ரஷ்யாவில் இருந்து அதிக அளவு தங்கம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சந்தையில் தங்கத்தின் அளவு திடீரென அதிகரிக்கும். அதிக சப்ளை இருந்தால் விலை இயல்பாக குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கம் விலை அடுத்த ஒரு மாதத்திற்கு தங்கம் விலை குறையும், இது குறுகிய காலத்தில் (short term) தங்கம் வாங்க விரும்புபவர்களுக்கு சற்று சாதகமாக அமையலாம்.

நீண்டகால பாதிப்பு – தங்க விலை உயரும் சாத்தியம்

மே 1க்குப் பிறகு ரஷ்யா தங்க ஏற்றுமதியை கணிசமாக குறைக்கும். உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடு சந்தையில் இருந்து விலகும் போது. பெரிய அளவிலான சப்ளை பாதிப்பு ஏற்படும், இதனால் உலக அளவில் தங்க சப்ளை குறையும். இது நீண்டகாலத்தில் (long term) தங்க விலையை உயர்வுக்கு பெரும் வாய்ப்பை உருவாக்கும் என்பது தான் நிதர்சனம். போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடரும் வரை இந்தப் போக்கு நீடிக்கும் என்பது சந்தை வல்லுநர்களின் கணிப்பு.

துருக்கி எடுத்த முடிவு

ஒருபுறம் ரஷ்யா ஏற்றுமதியை தடுக்கும் நிலையில், துருக்கி தன்னிடம் உள்ள தங்கத்தை தொடர்ந்து விற்று வருகிறது. பல நாடுகள் போர், பொருளாதார நெருக்கடி மற்றும் வர்த்தகத் தடைகள் காரணமாக தங்களிடம் உள்ள தங்கத்தை விற்று வாழ்க்கையை நடத்தும் நிலையில் உலக நாடுகள் தள்ளப்பட்டு உள்ளது என்பது தான் தற்போதைய நிலை. இந்த நாடுகள் தங்கத்தை “சர்வைவல்” கருவியாகப் பயன்படுத்துகின்றன. இதனால் சந்தையில் தங்கத்தின் அளவு ஏற்ற இறக்கத்தை சந்திக்கிறது.

மக்களே உஷார்

தங்க விலையில் ஏற்படும் இந்த ஏற்ற இறக்கம் இந்தியாவில் தங்க நகை வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை நேரடியாக பாதிக்கும். குறுகிய காலத்தில் விலை சற்று குறைந்தால் நகை வாங்க வாய்ப்பாக பார்க்கவும். ஆனால் நீண்டகாலத்தில் விலை உயர்ந்தால் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தங்கம் இன்றும் பலருக்கு பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

இன்றைய ஸ்பாட் சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் 1 சதவீதம் உயர்ந்து 4753 டாலராக உள்ளது. சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 3710 ரூபாய் அதிகரித்து 1,54,910 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 2720 ரூபாய் அதிகரித்து 1,13,600 ரூபாயாக உள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/russia-bans-gold-exports-above-100g-from-may-1-gold-prices-to-see-sharp-short-term-drop-then-long-788245.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo