“தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்..” ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி | Gold rate is in downward trend, is it worth to buy the yellow metal now? Anand Srinivasan explains

Business

oi-Vigneshkumar

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இப்போது பொதுமக்கள் அனைவரிடமும் இருக்கும் கேள்வி ஒன்றுதான்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாமா என்பது தான். பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது குறித்து மிக தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

கடந்த 1.5 ஆண்டுகளாகத் தங்கம் விலை வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் போர், ஆரம்பித்த பிறகு பிரேக் அடித்தது போலத் தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த 9 நாட்களில் நேற்று மட்டுமே தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்தளவுக்குத் தங்கம் விலை தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்துள்ளது.

Anand Srinivasan Gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இப்படித் தொடர்ந்து சரிந்து வருவதால் பொதுமக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது தங்கத்தை நாம் இப்போது வாங்கலாமா.. இல்லை கொஞ்சம் காத்திருந்து மேலும் குறைந்த பிறகு வாங்கலாமா என்பது தான் அது! இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகவும் அது தொடர்ந்து சரிந்து வருவது தொடர்பாகவும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ரூ.12,500

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “தங்கம் டமால் டமால்னு குறைந்து வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900 வரை போனது. கடந்த ஜனவரி தேதி தான் கடைசியாக இந்த விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தது. போர் காரணமாக விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், தங்கம் விலை குறைந்துள்ளது. இது இன்னும் குறையும்.. குறையக் குறைய வாங்கலாம். தங்கம் விலை ரூ.12,500 வரை சரியா வாய்ப்பு பிரகாசமா இருக்கிறது. ஏனென்றால் கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டிவிட்டது.

கத்தாரில் ஒரே குண்டு போட்டார்கள் உலகின் மிகப் பெரிய எல்என்ஜி மையம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், கேஸ் என இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கேஸ் சப்ளை பிரச்சனை இல்லை என அரசு சொன்னாலும் கூட கடை வைத்து நடத்துவோர் கேஸ் பிரச்சனை இருப்பதாகவே சொல்கிறார்கள். வட இந்தியாவில் பலர் கேஸ் சிலிண்டர் 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்கும் வீடியோ எல்லாம் இணையத்தில் வருகிறது. எது உண்மை எது பொய் எனத் தெரியவில்லை” என்றார்.

தங்கம் விலை சரியும்

அவர் மற்றொரு வீடியோவில், “வெள்ளி விலை 255- 260 எனப் பொய் சொல்கிறார்கள். ஆனால் உண்மையான ரேட் குறைவு. இன்று உங்களிடம் இருக்கும் வெள்ளியை விற்கப் போனால் ரூ.220க்கு தான் வாங்குகிறார்கள். தங்கம் விலை ஏன் சரிகிறது என்ற கேள்வி பலருக்கும் வரும். முதலில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் நான் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,000 தொடும் என்றேன். பிறகு ரூ.12500 என்றேன். அடுத்த 5 ஆண்டுகளில் 25,000 எனச் சொல்லி இருக்கிறேன். இதில் நான் தெளிவாகச் சொல்கிறேன்.

குறைய வாய்ப்பு அதிகம்

ரஷ்யா உக்ரைன் போர் சமயத்திலும் கூட தங்கம் விலை சட்டென 8 மாதங்கள் சரிந்தது. இது இப்போது 2 வாரமாக மட்டுமே குறைகிறது. இதற்கே சிலர் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். தங்கம் நிச்சயம் இறக்குமா எனக் கேட்டால் அதைச் சொல்ல முடியாது. ஆனால் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. போர் போக போக தங்கம் இறங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடந்த முறை அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைத்தது. ஆனால், இந்த முறை வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. இதனால் அந்தளவுக்கு வேகமாகக் குறையுமா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது. ஆனால், தங்கம் விலை சரிவதைப் பார்த்துக் கஷ்டப்பட வேண்டாம்.

மேலும், தங்கத்தின் குறைந்தபட்ச விலை இதுதான் என்று நம்மால் துல்லியமாகச் சொல்ல முடியாது. எப்போது அந்த குறைந்தபட்ச விலை வரும் என்பதையும் சொல்ல முடியாது. அவர்கள் மாறி மாறிக் குண்டு போட்டு, கச்சா எண்ணெய் விலை ஏறினால் தங்கம் விலை குறையும். ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை” என்றார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-rate-is-in-downward-trend-is-it-worth-to-buy-the-yellow-metal-now-anand-srinivasan-explains-783045.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo