
Business
oi-Velmurugan P
சென்னை: தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் சுமார் 13000 ரூபாய் வரை சரிந்துள்ளது இந்த சூழலில் தங்கம் விலை மேலும் 10 ஆயிரம் ரூபாய் வரை சரியும் என்கிறார்கள். தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என்கிற அளவில் சரிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டார் மார்ச் 19ம் தேதியான இன்று வரையிலான காலக்கட்டத்தில் தங்கம் விலை 13,160 ரூபாய் வரை சரிந்துள்ளது.
ஈரானில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தும், கச்சா எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியும், தங்கம் விலை ஏன் அதிகரிக்காமல் குறைந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை கடந்த மார்ச் 3ம் தேதி சென்னையில் 22 கேரட், ஒரு கிராம் 15775 ரூபாய் ஆக இருந்தது. ஒரு சவரன் தங்கம் மார்ச் 3ம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 700 ரூபாய் ஆக இருந்தது. அது தான் உட்சபட்ட விலையாக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்தது.

சட்டென இந்த 15 நாட்களில் தங்கம் விலை கடுமையாக சரிந்து ஒரு கிராம் 14300 ஆக இன்று விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு பவுனுக்கு 13,160 வரை மொத்தம் சரிந்து 114,400க்கு விற்பனையாகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு பவுனுக்கு 13,160 ரூபாய் வரை சரிந்துள்ளது. தங்கம் விலை இன்னும் 14 ஆயிரம் ரூபாய் வரை சரியும் என்று கூறுகிறார்கள், அதாவது ஒரு சவரன் ஒரு லட்சம் என்கிற அளவிற்கு குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள்.
டாலர் மதிப்பு உயர்வு
ஈரானில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தும், கச்சா எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியும், தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதற்கான காரணங்களை பொருளாதார நிபுணர்கள் விளக்கி உள்ளார்கள். அவர்கள் கூறியுள்ள தகவல்களின் படி, சர்வதேசச் சந்தையில் தங்கம் டாலரில்தான் வர்த்தகம் செய்யப்படுவது வழக்கம். தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு மிக வலுவாக இருப்பதால், மற்ற நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தங்கம் வாங்க அதிகமாக செலவு செய்கிறார்கள்.. இது தங்கத்திற்கான தேவையைக் குறைத்து, விலையை அழுத்தத்தில் வைத்திருக்கிறது.
வட்டி விகிதம் அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தே முன்பு தங்கத்தில் முதலீடு செய்தார்கள். ஆனால், பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால், வட்டி விகிதங்கள் உயர்வாகவே நீடிக்கும் என்ற சூழல் நிலவுகிறது. வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்போது, வட்டி தராத தங்கத்தில் முதலீடு செய்வதை விட, கச்சா எண்ணெய், அமெரிக்க பங்கு சந்தைகளில் முதலீடு செய்யவே பலரும் விரும்புவார்கள்.
தங்கம்’பாதுகாப்பான புகலிடம்’ என்ற அந்தஸ்து மந்தமானது ஏன்?
வழக்கமாகப் போர் காலங்களில் தங்கம் விலையேறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தங்கம் ஏற்கனவே நல்ல லாபத்தைக் கொடுத்துவிட்டதால், புதிய முதலீட்டாளர்கள் அதிக விலையில் வாங்கத் தயங்குகிறார்கள். உக்ரைன்-ரஷ்யா போரின்போது ஏற்பட்ட அந்த ‘பீதி கலந்த வாங்குதல்’ தற்போது ஈரான் போரின்போது ஏற்படவில்லை. முதலீட்டாளர்கள் மிகவும் நிதானமாகச் செயல்படுகிறார்கள்.
பணவீக்கமும் தொழில்துறை மந்தமும்
போர் காரணமாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பணவீக்கம் குறித்த அச்சம் எழுந்துள்ளது. அதேசமயம், செப்பு மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்களின் விலை குறைவது, உலகளவில் தொழில்துறை உற்பத்தி மந்தமாக இருப்பதைக் காட்டுகிறது. இது ஒட்டுமொத்த உலோகச் சந்தையையும் பாதிப்படையச் செய்திருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இறுதியாக அறிய வேண்டிய உண்மை
ஈரான் போரினால் ஏற்படும் அரசியல் பதற்றத்தை விட, அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வலுவான டாலர் ஆகியவை தங்கம் சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் வரை, தங்கம் விலை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-prices-drop-by-13-000-per-sovereign-potential-for-a-further-decline-of-up-to-14-000-782641.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


