தேர்தல் தேதி வெளியானதுமே வேட்பாளர்களை அறிவித்த மார்க்சிஸ்ட்! கேரளாவில் 56 சிட்டிங் MLAக்களுக்கு சீட் | CPIM to Contest 86 Seats in Kerala Assembly Elections 2026, Announces 81 Candidates today

India

oi-Vignesh Selvaraj

திருவனந்தபுரம்: 140 தொகுதிகள் உள்ள கேரளாவில் 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 7 இடங்களில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு அடுத்த மாதம் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கேரள சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரளாவில் இடதுசாரிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடது ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்.

CPIM to Contest 86 Seats in Kerala Assembly Elections 2026 Announces 81 Candidates today

கேரள சட்டசபையில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணி 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க எல்.டி.எஃப் முயற்சிக்கிறது.

இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 86 இடங்களில் போட்டியிடுகிறது. 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது சிபிஐஎம். 7 இடங்களில் அக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் போட்டியிட உள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா, கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பேராவூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 56 பேருக்கு வரும் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் தற்போதைய அமைச்சர்கள் ஆவர்.

முன்னதாக, இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 16 ஆம் தேதியான நாளை தொடங்குகிறது.

கேரளாவில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்றது. சிபிஐஎம் 62 இடங்களையும், சிபிஐ 17 இடங்களையும், ஐயுஎம்எல் 15 இடங்களையும், கேரளா காங்கிரஸ் 5 இடங்களையும், ஜேடி 2, என்சிபி கட்சி இரண்டு இடங்களையும் வென்றது.

மேலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 21 இடங்களிலும், ஐயுஎம்எல் 15 இடங்களிலும், கேளரா காங்கிரஸ் 2 இடங்களிலும், புரட்சிகர சோசலிசக் கட்சி 1, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. என்டிஏ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/cpim-to-contest-86-seats-in-kerala-assembly-elections-2026-announces-81-candidates-today-781633.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo