
International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானில் இரு நாட்டு அதிகாரிகளும் வந்திருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தானை முன்னிறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி ஸ்மூத்தாக போகிறது எனில், ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீராகும். எனவே பேச்சுவார்த்தை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மாலை 6.45 மணி நிலவரப்படி, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. இதில், பாகிஸ்தானிடம் ஈரான் வைத்த டிமாண்டுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
- லெபனானில் போர் நிறுத்தம்
- ஈரானின் சொத்துக்களை விடுவித்தல்
இது இரண்டும் நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரான் கூறியிருந்தது. இதனை பாகிஸ்தான் பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்து என்ன நடக்கும்?
தற்போது பேச்சுவார்த்தை, நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு பாசிட்டிவ் விஷயம். ஏனெனில், இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதால்தான் நிபுணர் குழுவிடம் பேச்சுவார்த்தை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே நிபுணர் குழு, இரு நாடுகளின் டிமாண்டுகளை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை ஆய்வு செய்யும்.
அமெரிக்கா தரப்பில், ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படியெனில், எத்தனை கப்பல்கள் ஒரு நாளைக்கு செல்ல அனுமதிக்கப்படும்? எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? என்பது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும்.
அதேபோல, ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட டிமாண்டையும் நிபுணர் குழு ஆய்வு செய்யும். கத்தாரில் ஈரானின் நிதி பல பில்லியன் டாலர் சிக்கியிருக்கிறது. இது எந்த வங்கி வழியாக விடுவிக்கப்படும், என்று நிபுணர் குழு ஆய்வு செய்யும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-begins-iran-talks-via-pakistan-as-mediator-whats-next-789115.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
