
International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய துல்லிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி இறந்தார். இருப்பினும் அவருடன் இருந்த அவரது மகனும், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி எப்படி தப்பினார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. போர் விமானங்கள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஏவி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தனது அலுவலக இல்லத்தில் வழக்கம்போல் அயதுல்லா அலி கமேனி தனது அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு தயாரானபோது இந்த தாக்குதல் நடந்தது. அயதுல்லா அலி கமேனி இறந்ததால் அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் தற்போது வரை பொதுவெளியில் தோன்றவில்லை. இதற்கிடையே தான் கடந்த 28 ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் தான் அவர் மக்கள் மத்தியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சில ஊடகங்களில் அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தான் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எப்படி நூலிழையில் உயிர் பிழைத்தார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஈரானின் உச்ச தலைவரின் அலுவலகத்தி்ல நெறிமுறைகள் சார்ந்த பிரிவின் தலைவராக உள்ள மஸாஹெர் ஹோசைனியின் வாய்ஸில் இந்த ஆடியோ வெளியாகி உள்ளது. இதனை ‘தி டெலிகிராஃப்’ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்த ஆடியோவில் தாக்குதல் எப்படி நடந்தது? யாரெல்லாம் இறந்தனர்? என்பது தொடர்பான விவரங்கள் பதிவாகி உள்ளது.
தற்போது லீக்காகி உள்ள அந்த ஆடியோவில், ”அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துள்ளார். இந்த தாக்குதல் ஈரானின் உள்ளூர் நேரப்படி காலை 9.32 மணிக்கு நடந்தது. அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் ஈரானின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகளை கொல்லும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அயதுல்லா அலி கமேனி இறந்தார். மகனான 56 வயது நிரம்பிய மொஜ்தபா கமேனி நூலிழையில் தப்பினார். தாக்குதல் நடந்தபோது அவர் மாளிகைக்கு வெளியே முற்றப்பகுதியில் ஒரு வேலைக்காக சென்றார். அவர் மாளிகைக்குள் இல்லை. மாளிகையின் முற்றத்தில் அங்கிருந்திருந்து அவர் மீண்டும் திரும்பியபோது தான் தாக்குதல் நடந்தது. அவர் மாளிகைக்குள் வர சில வினாடிகள் தாமதது. இதனால் மொஜ்தபா கமேனி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவரது காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவம் அவரது குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது. மொஜ்தபா கமேனியின் மனைவி சஹ்ரா ஹத்தாத்-அடெல் மற்றும் இளைய மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இன்னொரு மகன் ஸ்டஃபா கமேனியும், அவரது மனைவியும் எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளனர்.
அதேவேளையில் அயதுல்லா அலி கமேனியின் மருமகன் மிஸ்பா அல்-ஹுடா பகெரி கானி இறந்துள்ளார். அவரது தலை இரண்டாக பிளந்து கிடந்தது. ஈரானின் ராணுவ தளபதி முகமது ஷிராஸியின் உடல் முழுமையாக கிடைக்கவில்லை. கிலோ கணக்கில் அவரது சதைகள் மட்டுமே கிடைத்தது” என அந்த ஆடியோவி்ல உள்ளது. இந்த ஆடியோ தற்போது ஈரான் ஆதரவு நாடுகளை கலங்க வைத்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-how-iran-new-supreme-leader-mojtaba-khamenei-survived-attak-from-us-and-israel-782057.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
