
International
oi-Vigneshkumar
டெல்லி: போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே போரில் நெதன்யாகு தாக்கப்பட்டதாகவும் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவின. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வந்துள்ளன. நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதல் 3வது வாரமாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. இரு தரப்புமே மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் நிலைமை மிக மோசமாக உள்ளது. எங்கு எப்போது வேண்டுமானாலும் பிராந்திய போர் வெடிக்கும் என்ற அச்சமே இருக்கிறது.

பெஞ்சமின் நெதன்யாகு
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. அவர் தாக்கப்பட்டார் என்றும் உயிரிழந்துவிட்டார் என்றும் கூட தகவல்கள் பரவின. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நலமாக இருக்கிறார் என அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய சூழலில், இந்த விளக்கம் வந்துள்ளது.
நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் பரவி வருகிறதே எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இவை போலியான செய்திகள் என்றும் பிரதமர் நலமாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.. இதன் மூலம் இணையத்தில் கடந்த சில நாட்களாகத் தீயாகப் பரவிய வதந்திக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
ட்விட்டரில் பரவிய ஒரே ஒரு வீடியோ தான் இந்த வசந்திகளுக்குப் பிரதான காரணமாகும். அதாவது, அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் குறித்த வீடியோவில் அவரது வலது கையில் ஆறு விரல்கள் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். இதனால், அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என வதந்திகள் எழுந்தன. அந்த வீடியோவின் 0:35 நிமிடத்தில், நெதன்யாகு கைகளை உயர்த்தும்போது, தெரிந்த அந்த கூடுதல் சதைப்பகுதி “AI விரல்” என விமர்சிக்கப்பட்டது.
வல்லுநர்கள்
இது தொடர்பாக அமெரிக்க அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ், “பிபி (நெதன்யாகு) எங்கே? அவரது அலுவலகம் ஏன் போலியான AI வீடியோக்களை வெளியிடுகிறது? வெள்ளை மாளிகையில் ஏன் பதற்றம்?” எனக் கேள்வி எழுப்பினார். மற்றொரு நெட்டிசந், வீடியோவில் உள்ள இஸ்ரேல் கொடிகள் அசையாமல் இருக்க, இருண்ட திரைச்சீலை மட்டும் ஒரே மாதிரி அசைவது குறித்துச் சந்தேகம் எழுப்பினார்.. இது ஏஐ வீடியோவாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சிலர் இதை மறுக்கவும் செய்தனர். அதாவது அவர்கள், “செய்தி வாசிப்பாளர்கள் கூட இப்போது போலி பேக்கிரவுண்டகளை தான் பயன்படுத்துகிறார்கள். அதற்காக இது போலி என்று அர்த்தமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
விளக்கம்
ட்விட்டரின் ஏஐ சாட்போட்டான க்ரோக் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது, “நெதன்யாகுவுக்கு ஆறு விரல்கள் இல்லை. நிழல்கள், கையின் கோணங்கள் அல்லது உள்ளங்கையின் இயற்கையான வடிவம் காரணமாக ஏற்பட்ட ஆப்டிகல் மாயைகள் தான் இவை. இந்த வீடியோக்களை முழுமையாக ஆய்வு செய்தால் அவருக்கு ஐந்து விரல்கள் மட்டுமே இருப்பது தெரிகிறது” என்றது.
பின்னணி
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்கின. போரின் முதல் நாளிலேயே உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தின. மேலும், மற்ற அரபு நாடுகள் மீதும் ஈரான் சரமாரியாகத் தாக்குதல்களை ஆரம்பித்தன.
மேலும், உலகின் எண்ணெய் விநியோகத்திற்கான முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியுள்ளது. இது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நீர் வழிப்பாதை தினமும் சுமார் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதியையும், உலகளாவிய திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதத்தையும் கையாளும் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமாகும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-prime-minister-netanyahu-alive-office-debunks-death-rumors-over-ai-six-finger-video-glitch-781441.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
