
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: உலகின் மிக வலிமையான விமானம் என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் F-35 ரக விமானத்தை, ஈரான் சமீபத்தில் தாக்கியிருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது மற்றொரு விமானமான F-15-யும் ஈரான் தாக்கியிருக்கிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. வான்வெளி சிங்கம் என அழைக்கப்படும் இந்த விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தியிருப்பது அமெரிக்க விமானப்படையின் பலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

என்ன நடந்தது?
இன்று காலை, ஈரானின் ஹார்முஸ் தீவுக்கு பக்கத்தில் இந்த விமானம் பறந்துக்கொண்டிருந்தது. இதனை லாக் செய்த, ஈரானின் வான் பாதுகாப்பு அம்சம், ஏவுகணையை வீசி அந்த விமானத்தை வீழ்த்தியிருக்கிறது. இதனை ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ISNA மற்றும் Press TV உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுவரை அமெரிக்கா தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
F-15 விமானத்தின் பலம்
இது பறக்கும் ஆயுத லாரி போன்றது. இந்த விமானத்தில் 13,300 கி.கி வரை ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். இதுவரை இந்த விமானத்தை நேருக்கு நேர் யாரும் வீழ்த்தியதே கிடையாது. நேருக்கு நேர் நடந்த சண்டையில் 140 எதிரி விமானங்களை இது சுட்டு வீழ்த்தியிருக்கிறது. எனவேதான் இந்த விமானத்திற்கு ‘வான்வெளி சிங்கம்’ என்று பெயர் வந்திருக்கிறது. இதன் பலம், வேகம்தான். ஒலியை விட 2.5 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும். மட்டுமல்லாது செங்குத்தாக இது மேலெழும்பும். இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற விமானங்கள் தோற்று போய்விடுகின்றன.
இப்படியான விமானத்தைதான் ஈரான் அசால்ட்டாக சம்பவம் செய்திருக்கிறது. F-15 விமானத்தில் ஸ்டெதல்ட் தொழில்நுட்பம் கிடையாது. எனவே, எதிரிகளின் ரேடார் தொழில்நுட்பத்தில் எளிதாக சிக்கிக்கொள்ளும். அப்படித்தான் தற்போதும் மாட்டியிருக்கிறது.
ஈரான் செய்த சம்பவம்
F-15 என்னதான் வேகமாக பறக்கும் திறன் கொண்டிருந்தாலும், ரஷ்யாவின் S-400 போன்ற வான் பாதுகாப்பு அம்சத்திடமிருந்து தப்பிக்க முடியாது. S-400, சுமார் 600 கி.மீக்கு முன்னதாகவே F-15 விமானத்தை கண்டுபிடித்துவிடும். 400 கி.மீ உள்ளே வரும் வரை நோட்டம் விட்டுவிட்டு, பின்னர் ஏவுகணைகளை வீசும். இந்த ஏவுகணைகள் ஒலியை விட 6-12 மடங்கு வேகத்தில் செல்லும். இப்படி போவதால், F-15 விமானி என்ன ஆட்டம் காட்டினாலும் தப்பிக்க முடியாது.
எப்படி நடந்தது?
இந்த ஏவுகணைகள் விமானத்தை நேரடியாக தாக்காது. அதற்கு பதில், விமானத்திற்கு அருகில் சென்று வெடிக்கும். அப்போது வெளியேறும் ஆயிரக்கணக்கான உலோக துண்டுகள், விமானத்தை நிலை குலைய செய்துவிடும். இப்படித்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
ஏற்கெனவே F-35 ரக விமானத்தை ஈரான் தாக்கியிருந்தது, அமெரிக்காவுக்கு கவுரவ பிரச்சனையாக இருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு போர் விமானம் தாக்கப்பட்டிருப்பது, அமெரிக்க விமானப்படையின் மீதான நம்பக தன்மையை குறைத்திருக்கிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-claims-downing-of-f-15-fighter-jet-near-hormuz-island-amid-escalating-war-783523.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


