பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை | Iran Israel War Escalates With Missile Strikes, US Role Raises Tensions

International

oi-Rajkumar R

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 5 நாள் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையிலும், தாக்குதல்கள் குறையாததால் அப்பகுதியில் நிலைமை மேலும் பதற்றமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தற்போது நான்காவது வாரத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், இரு தரப்பும் தொடர்ந்து கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில் டெஹ்ரான் நகரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக டெல் அவிவ் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Iran Israel US

இந்த தாக்குதல்கள் அதிகாலை நேரத்தில் தொடங்கி இடைவிடாமல் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில், சுமார் 100 கிலோ வெடிபொருள் நிரப்பப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்புகளை மீறி டெல் அவிவ்-ல் விழுந்து வெடித்தது.

ஈரான் இஸ்ரேல் போர்

இதனால் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, சவூதி அரேபியா மற்றும் Bahrain நாடுகளின் வான்வெளிக்குள் ஈரானின் ட்ரோன்கள் ஊடுருவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த நாடுகளிலும் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

போர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா அதிபர் டொனால்ட், ஈரான் மீது எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படவிருந்த தாக்குதலுக்கான காலக்கெடுவை 5 நாட்களுக்கு ஒத்திவைத்ததாக முன்பே அறிவித்திருந்தார். அதே நேரத்தில், அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தை குறித்து பேசியாலும், மத்திய கிழக்கு பகுதிக்குத் தனது கடற்படை மற்றும் ராணுவப்படைகளை அதிக அளவில் அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெஞ்சமின் நெதன்யாகு

இதனால் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமாக உள்ள கார்க் தீவு மீது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்த சூழல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய ‘பணிகள்’ முடிக்கப்பட வேண்டியுள்ளது என்று அவர் கூறியிருப்பது, வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

ஷெபாஷ் ஷெரீப்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்ற தகவல்களை முகமது பாகா் கலிபாஃப் திட்டமிட்ட பொய்யான பிரச்சாரம் என மறுத்துள்ளார். அதே நேரத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஷெபாஷ் ஷெரீப் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஈரான்

இதற்கிடையில், இஸ்ரேல் ஈரான் மோதலில் உயிரிழந்த முன்னாள் தலைவரான அலி லாரிஜானிக்கு பதிலாக, புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதி முகமது பாகா் சொல்கத்ர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லெபனான்

இதற்கிடையில், லெபனான் நாட்டில் ஹெஸ்புல்லாஅமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி உள்பட 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரானின் தலையீடு காரணமாக நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, லெபனான் அரசு ஈரான் தூதரிடம் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-israel-war-escalates-with-missile-strikes-us-role-raises-tensions-784183.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo