பீல்டிங் பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்.. அப்போ விக்கெட் கீப்பர் தோனி தானா? சிஎஸ்கே கொடுத்த சிக்னல்! | Sanju Samson: Sanju Samson doing some fielding Practice with CSK Coach James Foster which is surprising for fans

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஃபோஸ்டருடன் இணைந்து ஹை கேட்ச்களை பிடித்து பயிற்சி மேற்கொண்டிருப்பது பல்வேறு சிக்னல்களை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான முன்னோட்டமாக சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் மேத்யூ ஹெய்டன், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் உள்ளிட்ட ஏராளமான முன்னாள் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.

Sanju Samson

இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்குவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு ஆரம்பப் புள்ளியாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் வீரர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்க போகின்றனர். இதனிடையே சிஎஸ்கே வீரர்களின் பயிற்சி குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

சிஎஸ்கே அணியில் முதல்முறையாக சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். தோனிக்கான மாற்று வீரராக சஞ்சு சாம்சன் இருப்பார் என்று கருதப்பட்டது. இதனால் விக்கெட் கீப்பிங் பணிகளில் இருந்து தோனி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்வார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நேற்றைய பயிற்சியின் போது ஃபீல்டிங் பயிற்சியாளர் ஃபோஸ்டருடன் இணைந்து சஞ்சு சாம்சன் பயிற்சியில் ஈடுபட்டார்.

விக்கெட் கீப்பிங் பயிற்சி அல்லாமல் ஃபீல்டருக்கான பயிற்சியில் சஞ்சு சாம்சன் ஈடுபட்டார். அதிலும் மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் வரும் ஹை கேட்ச்களை பிடிக்க சஞ்சு சாம்சன் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த சீசனிலும் தோனி விக்கெட் கீப்பிங் செய்வார் என்று புரிய வருகிறது.

ஏற்கனவே தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால், நான் ஆட்டத்தில் இல்லை என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதனால் விளையாட முடியாது என்று நினைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக விளையாடுவதை தவிர்க்க மாட்டேன் என்று கூறி இருந்தார். இதனால் இந்த சீசனில் தோனி ஒவ்வொரு போட்டியிலும் ஆடுவார் என்று கருதப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-sanju-samson-doing-some-fielding-practice-with-csk-coach-james-foster-which-is-surpris-783389.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo