
Cricket
oi-Vigneshkumar
சென்னை: இந்தியாவின் நட்சத்திர பவுலர் பும்ராவின் மிக முக்கியமான ஆயுதங்களில் ஒன்று ஸ்லோ பவுலர்கள். உலகின் தலைசிறந்த பவுலர்களும் கூட திடீர் ஸ்லோ பால்களில் திணறிப் போகிறார்கள். இதற்கிடையே பும்ராவுக்கு ஸ்லோ பால்கள் வீசுவதை கற்றுக் கொடுத்ததே நான்தான் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்றால் பும்ரா. அவர் தான் இந்தியாவின் சீட் கோட் என்றே சொல்லலாம். குறிப்பாக டி20 போட்டிகளில் அவரது 4 ஓவர்களை அடித்து ஆடுவதை எதிர்த் தரப்பு மொத்தமாகவே தவிர்த்துவிடுவார்கள். பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பும்ரா மிக முக்கியமான உதவி இருக்கிறார்.

பும்ரா
இதற்கிடையே பும்ரா குறித்து பாகிஸ்தானில் பிறந்த ஐக்கிய அரபு அமீரகம் பந்து வீச்சாளர் ஜஹூர் கான் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது பும்ராவின் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று ஸ்லோ பால்கள். எதிர்பாராத நேரத்தில் வரும் ஸ்லோ பந்துகளால் அனைத்து பேட்ஸ்மேன்களுமே கூட ஒரு நொடி திணறிப் போகிறார்கள். இந்த ஸ்லோ பால்களை பும்ரா தன்னை பார்த்தே கற்றுக் கொண்டதாகக் கூறியிருக்கிறார் ஹஜூர் கான்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதில் 2019 ஐபிஎல் போட்டியின் போது, பவுலிங் ஆக்ஷனில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஸ்லோ பால்களை எப்படி வீச வேண்டும் என்பதைத் தான் பும்ராவுக்கு கற்பித்ததாக ஜஹூர் கூறினார். அந்த தொடரில் தான் மும்பை அணிக்கு நெட் பவுலராக இருந்ததாக ஜஹூர் நினைவுகூர்ந்தார், அங்குதான் பும்ரா அவருடன் பந்து வீச்சு நுட்பத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார். அதற்கு முன்பே கூட பும்ரா ஸ்லோ பால்களை வீசினாலும், தான் சொல்லிக் கொடுத்த பிறகே அவர் அதில் சிறந்து விளங்கியதாக ஜஹூர் சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் தொடர்
இது தொடர்பாக அவர் மேலும், “இங்கு நான் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பும்ரா முன்பு இருந்தே ஸ்லோ பால்களை வீசுவார். ஆனால், அது நார்மலாகவே இருக்கும். (2019) ஐபிஎல் தொடரில் அபுதாபியில் நடந்த ஒரு போட்டியில், அவர், ட்ரென்ட் போல்ட் மற்றும் நாதான் கவ்ல்டர்-நைல் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர்.. அந்த ஆண்டு செப்டம்பரில் ஐபிஎல் நடந்தது. செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 50 டிகிரி வெப்பம் போகும். அதிக புழுக்கத்தால் இரவிலும் பந்தைச் சரியாகப் பிடிக்கக் கூட முடியாது. ஏனென்றால் வியர்வையில் அது நனையும்.
அதனால் மும்பை இந்தியன்ஸ் டீம் நிர்வாகம் என்னை அழைத்தது… 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு, 7வது நாள் பயிற்சிக்குச் சென்றேன். அந்த இரவு அணியுடன் இருந்தேன். ஜஹீர் கான் மற்றும் ராபின் சிங் என்னை அறிந்திருந்தனர். ஏனென்றால் டி10 லீக்கில் நான் மெய்டின் ஓவர் வீசியிருந்தேன்.. முதல் பந்து யார்க்கர், அடுத்த ஐந்து பந்துகள் ஸ்லோ பால்கள். இதனாலேயே என்னைப் பயிற்சிக்கு அழைத்தனர். பும்ரா, ரோஹித் சர்மா, நான் அங்கு இருந்தோம்.
ஸ்லோ பால்கள்
அவர்களில் சிலருக்கு எனது ஸ்லோ பால்கள் பற்றித் தெரிந்து இருந்தது. அப்போது தான் பும்ரமாவுக்கு இது குறித்து விளக்கினேன். நார்மல் பவுலிங் ஆக்ஷன் மற்றும் நார்மல் க்ரிப்பை பிடித்துக் கொண்டு, எப்படி ஸ்லோ பால்களை வீச முடியும் என கேட்டார். நான் அவர் முன்பு பவுலிங் வீசினேன். ஷேன் பாண்ட் தான் அப்போது மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். மஹேலா ஜெயவர்த்தனே நெட்டு பின்னால் நின்றிருந்தார். நான் வந்து ஸ்லோ பவுன்சரை வீசினேன். அது பேட்ஸ்மேனால் அதை ஆட முடியவில்லை. எப்படி இத சாத்தியம் என ஷேன் பாண்ட் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். நானும் விளக்கினேன்.
மேலும் விளக்கமான சொல்லச் சொன்னார்கள். அப்போதே 2,3 ஸ்லோ பால்களை வீசினேன். இது கிரிக்கெட்டிலேயே புதிதான ஒரு விஷயம் என ஜெயவர்த்தனே என்னிடம் கூறினார். வழக்கமான பவுலிங் ஆக்ஷன், நார்மல் ஹேண்ட் போசிஷனிலேயே பவுலிங் போடுகிறார் என்றனர்.
சொல்லிக் கொடுத்தேன்
இது நடந்து சில தினங்களுக்குப் பிறகு, ஜஸ்பிரித் பும்ராவுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது இதை நான் எப்படிச் செய்கிறேன் என்பதை பும்ரா காட்ட சொன்னார். நானும் க்ரிப்பை விளக்கினேன். இது நிஜமாகவே அடுத்த லெவல் விஷயம் எனச் சொல்லிப் பாராட்டிய பும்ரா அதை முயன்றனர். பும்ரா அப்போதே ஒரு சர்வதேச நட்சத்திரம். ஆனாலும் அவர் என்னிடம் வந்து கேட்டு, கற்றுக் கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/pakistan-born-pacer-claims-that-indian-bowler-jasprit-bumrah-has-learned-slower-balls-from-him-780345.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
