மகளுடன் வந்த வட கொரியா அதிபர் கிம் ஜான் உன்.. ‘சோ ஹியோன்’ கப்பலில்.. பெரிய சம்பவம் | North Korean President Kim Jong Un arrives with his daughter: Big incident on the ship

International

oi-Velmurugan P

சியோல்: அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளை தற்போது தீவிரமாக்கி வருகிறது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் நேரில் வந்து பார்வையிட்டார்.

வட கொரியாவை பொறுத்தரை சீனா, ரஷ்யாவிற்கு நட்பு நாடாக உள்ளது. அதேநேரம் அமெரிக்காவிற்கு சுத்தமாக பிடிக்காத நாடாகவும் உள்ளது. அவ்வப்போது வடகொரியா தென்கொரியாவை மிரட்டும் வகையில் நடக்கும்.. பதிலுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடததும். இது வழக்கமான ஒன்று தான்.

North Korean President Kim Jong Un arrives with his daughter Big incident on the ship

தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் ராணுவ பயிற்சியை அதிகமாக்கி உள்ளது. அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீடம் ஷீல்ட்’ என்ற ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இதனைத் தங்களுக்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. எனவே அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக வழக்கம் போல், வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ என்ற அதிநவீன போர்க்கப்பலில் இருந்து நேற்று குரூஸ் ஏவுகணைகள் ஏவி உள்ளது, இந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது,

‘சோ ஹியோன்’ கப்பலில் நடந்த ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் நேரில் வந்து பார்வையிட்டார். ஒரு கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, திரையில் ஏவுகணைகள் பாய்வதையும் அவை இலக்குகளைத் தாக்குவதையும் தனது மகளுக்கு அவர் விளக்கம் அளித்தார். மகளும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் கடந்த சில வாரங்களாகவே தனது மகளை ராணுவ நிகழ்வுகளுக்கு அழைத்து வருவதால், அவரே வடகொரியாவின் அடுத்த வாரிசு என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாம். வரும் காலத்தில் வட கொரியாவின் தலைவராக கிம் ஜூ ஏ வருவார் என்றும் உறுதியாக சொல்கிறார்கள்.

இதனிடையே இந்த ஏவுகணை சோதனைக்குப் பிறகு பேசிய கிம் ஜாங் அன், “நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனுடன் இருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்திருக்கிறது” என்றார்.

இதற்கிடையே கிம் ஜாங் அன்-னின் சகோதரி கிம் யோ ஜாங் தனது அறிக்கையில், எதிரிகள் எங்கள் வலிமையை விரைவில் உணர்வார்கள்” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கி உள்ளதாக எச்சரித்தார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/north-korean-president-kim-jong-un-arrives-with-his-daughter-big-incident-on-the-ship-780783.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo