மதத்தை கையில் எடுக்கும் மம்தா.. வளர்ச்சி முழக்கத்தோடு வரும் பாஜக.. என்ன சீன் மாறி போய் கிடக்கு | West Bengal election: Trinamool Adds Religion to Campaign Mix, While BJP Pushes Development Message

India

oi-Vigneshkumar

கொல்கத்தா: இந்த முறை மேற்கு வங்க தேர்தல் வழக்கம் போல யாருமே எதிர்பார்க்காத பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அங்கு ஆளும் திரிணாமு் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதில் விஷயம் என்னவென்றால் இந்த முறை அங்கு திரிணாமுல் காங்கிரஸ் மத ரீதியான ஆதரவை நோக்கியும், பாஜக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் முக்கியத்துவம் அளித்தும் களமிறங்கியுள்ளன.

கடந்த 2019ல் மேற்கு வங்க தேர்தல் போது “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் பேசுபொருளாகவே இருந்தது. மம்தா “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்திற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினார். அவரை சீண்டும் வகையிலேயே பாஜக தொண்டர்கள் “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் அவர் காரை விட்டு இறங்கி வந்து “எங்கே இப்போது சொல்லுங்கள்” என்பது போலவும் கேட்டார்.

west bengal election 2026 Mamata Banerjee BJP

ஜெய் ஸ்ரீராம்

“ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதாக அப்போது திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்தது. இந்த விவகாரத்தில் பல பாஜக தொண்டர்கள் கைதும் செய்யப்பட்டனர். ஆனால், இம்முறை நிலைமை மாறியுள்ளது. திரிணாமுல் தனது உத்தியை மாற்றி, பிரச்சாரத்தில் மதத்தை இணைத்துள்ளது.

“ஜெய் ஸ்ரீராம்” பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது இல்லை எனச் சொல்லும் திரிணாமுல் நிர்வாகிகள் இந்த முறை அந்த கோஷத்தையே பயன்படுத்துகிறார்கள். கடந்த வாரம் அங்கு ராம நவமி கொண்டாட்டத்தின் போது பல இடங்களில் திரிணாமுல் நிர்வாகிகளின் “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்தைப் பார்க்க முடிந்தது. இது மேற்கு வங்க அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திரிணாமுல் கட்சியும் இந்துத்துவ அரசியலைக் கையில் எடுத்துள்ளதாக அங்குள்ள இடதுசாரிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கோயில்களைக் கட்டும் மம்தா

கடந்த சில ஆண்டுகளாக மம்தா அரசு மேற்கு வங்கம் முழுக்க கோயில்களைக் கட்டி வருவதையும் இடதுசாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். திஹா ஜெகந்நாதர், சிலிகுரி மகாகால் உட்படப் பல கோயில்களை திரிணாமுல் அரசு கட்டியுள்ளது.. கொல்கத்தாவில் துர்கா பூஜை தொடர்பான கோயில் பணிகளும் நடைபெற்றன.

மறுபுறம் பாஜகவும் தங்கள் பிரச்சார யுக்தியை மாற்றிக் கொண்டுள்ளன. உள்ளூர் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்.. “ஜெய் ஸ்ரீராம்” மட்டுமின்றி, “ஜெய் மா காளி”, “ஜெய் மா துர்கா” போன்ற முழக்கங்களை எழுப்புகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற மூத்த பாஜக தலைவர்களும் “ஜெய் மா காளி”, “ஜெய் மா துர்கா” கோஷங்களை எழுப்பினர்.

பாஜக

அதேநேரம் பாஜக மேற்கு வங்க தேர்தலை மத ரீதியாக அணுகவில்லை. வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய கோஷங்கள் உடனேயே தேர்தலை அணுகுகிறது. அதாவது 2011ல் எந்த கோஷத்தோடு 35 ஆண்டுக்கால இடதுசாரி ஆட்சியை மம்தா வீழ்த்தினாரோ.. இப்போது அதே கோஷத்தோடு பாஜக மம்தாவை வீழ்த்த பார்க்கிறது. இன்னுமே பாஜகவின் அடையாளமாக இந்துத்துவா இருந்தாலும் கூட பிரச்சாரங்களில் வளர்ச்சி மற்றும் நிர்வாக மாற்றமும் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

முதலமைச்சர் மாற்றம் மட்டுமன்றி, நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம் என அறிவித்துள்ளார் அமித் ஷா! இதன் காரணமாகவே மோடி, அமித் ஷா இருவரும் மம்தா பானர்ஜியை பெயரைக் கூட நேரடியாகக் குறிப்பிடுவதில்லை.. மாநில அரசின் தவறான நிர்வாகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், நிர்வாகத் தோல்விகள் குறித்தே பேசுகிறார்கள்..

என்ன நடக்கும்

இப்போது வரை வந்துள்ள தகவல்களில் பாஜகவுக்கு மிகப் பெரிய வளர்ச்சி மேற்கு வங்கத்தில் இருக்கும் என்றாலும் அது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இருக்காது என்றே சொல்கிறார்கள். இருப்பினும், பாஜகவின் கடைசிக் கட்ட பிரச்சாரம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் இருக்கும்!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/west-bengal-election-trinamool-adds-religion-to-campaign-mix-while-bjp-pushes-development-message-787455.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo