மனசு சிஎஸ்கே-னு சொல்லுது.. மூளை ஆர்சிபி-னு சொல்லுது.. கடைசியாக அஸ்வின் சொன்ன மேட்டர்! | Ashwin: My Heart says CSK and My mind says RCB predicts Ravichandran Ashwin ahead of RCB vs CSK Rivalry in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

பெங்களூர்: ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கணிப்பை கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் கணித்துள்ளார். ஆர்சிபி அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்துள்ளதாக கூறிய அஸ்வின், சிஎஸ்கே அணி அகீல் ஹொசைனை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

பெங்களூரில் இன்று இரவு நடக்கும் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடந்த 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியும் ஒரு டிரான்ஸிசனில் இருப்பதால் ரசிகர்கள் சோர்வடைந்துள்ளனர்.

Ashwin

ரசிகர்களை மீண்டும் உற்சாகம் அடைய வைக்க வேண்டும் என்றால், ஆர்சிபி அணியை வீழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆர்சிபி அணியிலும் ஹேசல்வுட், யாஷ் தயாள் ஆகியோர் காயம் மற்றும் சொந்த பிரச்சனைகள் காரணமாக விளையாடவில்லை. அதேபோல் க்ருணால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரும் ஃபார்மில் இல்லை.

மறுபக்கம் சிஎஸ்கே அணியில் பவுலர்கள் போதுமான பலத்துடன் இல்லை. இதுதொடர்பாக அஸ்வின் பேசுகையில், ஆர்சிபி அணி தான் வெல்லும் என்று சொல்ல முடியவில்லை. நான் கொஞ்சம் சிஎஸ்கே அணிக்கு சாதகமாகவே இருப்பேன். அதில் எனக்கு எந்த கூச்சமோ, வெக்கமோ இல்லை. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெல்லும் என்று மனசு சொல்கிறது.

ஆனால் மூளை ஆர்சிபி வெல்லும் என்று சொல்கிறது என்று கூறியுள்ளார். அதேபோல், ருதுராஜ் கெய்க்வாட் அவ்வளவு மோசமாக கேப்டன்சி செய்யவில்லை. ஏனென்றால் சிஎஸ்கே அணியில் இருக்கும் பவுலர்கள் அனைவருமே ஓவருக்கு 10 ரன்கள் கொடுக்கிறார்கள். ஒரு திட்டத்துடன் பந்தை பவுலர்கள் கையில் கொடுத்தால், அதனை செயல்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றும் ஆதரவாக பேசியுள்ளார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ashwin-my-heart-says-csk-and-my-mind-says-rcb-predicts-ravichandran-ashwin-ahead-of-rcb-vs-csk-riva-787297.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo