மாட்டிக்கிட்டாங்க.. உதட்டு முத்தம் கொடுத்த 3 கிரிக்கெட் வீரர்கள்.. அகமதாபாத்தில் அரங்கேறிய சம்பவம்! | T20 World Cup 2026: Hardik Pandya, Ishan Kishan and Glenn Phillips give Lip lock kiss to their Women in the Ahmedabad Stadium is become a topic of discussion among fans

Cricket

oi-Yogeshwaran Moorthi

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியின் 2 வீரர்களும், நியூசிலாந்து அணியின் ஒரு வீரரும் தங்களின் காதலிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலமாக டி20 உலகக்கோப்பைத் தொடரை 3வது முறையாக இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் உற்சாகமாக கொண்டாடினார்கள். அந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

T20 World Cup 2026

ஏனென்றால் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களின் போது வீரர்கள் மட்டுமே மைதானத்தில் கொண்டாடி இருப்பார்கள். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுவிட்டு விராட் கோலி ஆடிய டான்ஸை யாராலும் மறக்க முடியாது. அதேபோல் 2011 உலகக்கோப்பையை வென்ற பின் சச்சின் டெண்டுல்கரை இந்திய வீரர்கள் தோளில் தூக்கி சுமந்தனர்.

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் கண்ணீர்விட்டு கொண்டாடினார்கள். அப்போது எந்த கொண்டாட்டத்திலும் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இந்திய வீரர்களின் மனைவி மற்றும் காதலி மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுதான் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ஏனென்றால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் கொஞ்சம் எல்லை மீறினர். கிளென் பிலிப்ஸ்க்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது மனைவி விக்டோரியா உதட்டில் முத்தம் கொடுத்து நீண்ட நேரம் கட்டியணைத்து நின்று கொண்டிருந்தார்.

மறுபக்கம் ஹர்திக் பாண்டியா தனது காதலியான மஹிகா சர்மாவுடன் நீண்ட நேரம் கொண்டாடி கொண்டே இருந்தார். மைதானத்திற்குள் வந்த உடனே மஹிகா சர்மா முத்தம் கொடுத்து ஹர்திக் பாண்டியாவுடன் கொண்டாட, அது சிறிது நேரத்தில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட மேடையில் ஹர்திக் பாண்டியாவும், மஹிகா சம்ரா படுத்து ரொமான்ஸ் செய்ய தொடங்கினர்.

இன்னொரு பக்கம் இஷான் கிஷன் தனது காதலியான அதிதி ஹூண்டியாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். அதன்பின் ஒவ்வொரு வீரரிடம் அதிதி ஹூண்டியாவை அறிமுகம் செய்து வைத்தார். இதனால் இந்திய வீரர்களின் கொண்டாட்டம் எல்லை மீறிய ஒன்றாகவும், எதிர்காலத்தில் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/t20-world-cup-2026-hardik-pandya-ishan-kishan-and-glenn-phillips-give-lip-lock-kiss-to-their-women-780473.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo