மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது எப்படி? கார்த்திக் சர்மா, உர்வில் படேலுக்கு பாடம் எடுத்த தோனி! | MS Dhoni: CSK Former Captain MS Dhoni teaching wicket keeping skills to Urvil Patel and Karthik Sharma in the Practice session ahead of IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் விக்கெட் கீப்பர்களான கார்த்திக் சர்மா மற்றும் உர்வில் படேல் ஆகியோருக்கு தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி கொடுத்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதிலும் உர்வில் படேலுக்கு ஸ்டம்பிங் செய்வது தொடர்பாக ஆலோசனை அளித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சிஎஸ்கே அணியிலேயே இரு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வீரரையும் தோனி உட்பட சீனியர்கள் பலரும் வழிநடத்தி வருகின்றனர். அதேபோல் ருதுராஜ், சாம்சன் உள்ளிட்டோர் பயிற்சியில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர்.

MS Dhoni

அதேபோல் சாம்சன் இம்முறை விக்கெட் கீப்பராக அல்லாமல் ஃபீல்டராக மட்டுமே செயல்படுவார் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் லாங் ஆன் மற்றும் லாங் ஆஃப் திசையில் ஃபீல்டிங் பயிற்சியில் சஞ்சு சாம்சன் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம் உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா இருவரும் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்கிறார்கள். இவர்களுக்கு தோனி வழிகாட்டி வருகிறார்.

குறிப்பாக உர்வில் படேலுக்கு ஸ்டம்பிங் பயிற்சியை தோனி அளித்தார். இன்னொரு பக்கம் கார்த்திக் சர்மாவுக்கு பேட்ஸ்மேன்களின் ஃபூட் வொர்க்கை பார்த்து ஸ்டம்பிங் செய்யவும் வழிகாட்டி வந்தார். இதன் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜூனியர்களை தோனி கையாள்வது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு வரை தோனி அவர்களுடன் பேசிவிட்டு ஆலோசனை மட்டுமே செய்வார். இந்த முறை ஒரு ஆலோசகரை போல் தோனி ஒவ்வொரு வீரருடன் நேரம் செலவிட்டு அவர்களை தயார் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் தோனி விரைவில் சிஎஸ்கே அணியின் ஆலோசகர் இருக்கையில் அமர்வார் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் தோனியின் ஃபிட்னஸ் பிரச்சனை காரணமாக மிட் சீசனில் உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா இருவருக்கும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இவர்கள் இருவருமே ஃபினிஷிங் ரோலில் விளையாட சிஎஸ்கே அணிக்காக தயார் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-csk-former-captain-ms-dhoni-teaching-wicket-keeping-skills-to-urvil-patel-and-karthik-shar-784413.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo