முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் | Iran War: Iran stikes on Amazon’s cloud computing operation in Bahrain

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: அமெரிக்காவின் ஐடி நிறுவனங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் வார்னிங் செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள அமேசான் வெப் சர்வீசின் கிளவுட் கம்ப்யூட்டிங் ஆபரேஷன்களுக்கான சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் மீது ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் அமெரிக்காவிற்கு பணியாமல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Iran stikes on Amazon

இந்நிலையில் தான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுவோர் மற்றும் அதன் அருகே வசிப்போர் அந்த நிறுவனங்களை விட்டு ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்று ஈரான் வார்னிங் செய்திருந்தது.

ஈரான் எச்சரிக்கை

இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர படை வெளியிட்ட செய்தியில், ”ஈரானின் உயர் தலைவர்களை அமெரிக்கா குறிவைப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் அமெரிக்கா செவிசாய்க்கவில்லை. மீண்டும் மீண்டும் விடுத்த எச்சரிக்கையை புறக்கணித்துள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சொந்தமான தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். ஏனென்றால் இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் படுகொலை தொடர்பான இலக்குகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது” என்று கூறியிருந்தது.

பட்டியலில் என்னென்ன நிறுவனங்கள்

ஈரானின் இந்த தாக்குதல் பட்டியலில் அமெரிக்காவின் ஆப்பிள், கூகுள், மெட்டா, இன்டெல், மைக்ரோசாப்ட், ஆரக்கள், டெஸ்லா, Palantir, Nvidia உள்பட 15க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் தான் ஈரான் முதற்கட்டமாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் சேவைகளை வழங்கும் உள்கட்டமைப்புகளை கொண்டுள்ள நிறுவவனம் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.

அமேசானை குறிவைத்து தாக்குதல்

அதாவது மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனின் ஹமாலா பகுதியில் Batelco எனும் பஹ்ரைன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமாகும். இது Amazon Web Services-ன் (AWS) கிளவுட் கம்ப்யூட்டர் ஆபரேஷன்களை வழங்கி வருகிறது. இதற்காக பிரத்யேக கட்டமைப்புகளை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அந்த நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதல் காரணமாக தற்போது பஹ்ரைனின் சில இடங்கள் தீப்பிடித்து எரிகிறது. இது போரில் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

டிரம்புக்கு அழுத்தம்

மேலும், அமெரிக்காவின் ஐடி நிறுவனங்களை குறிவைத்து தாக்கினால் அது டிரம்புக்கு நேரடியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஐடி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுவனங்களின் தலைவர்கள் டிரம்பிடம் கோரிக்கை வைக்கலாம். இதனால் தான் தற்போது ஈரான், ஐடி உள்பட பிற தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ள முன்னதாக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளன் 2 டேட்டா சென்டர்கள் மீது ஈரான் தாக்கியதாக அமேசான் தெரிவித்து இருந்தது. தற்போது மீண்டும் ஈரானால், அமேசானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-iran-stikes-on-amazons-cloud-computing-operation-in-bahrain-786359.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo