முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியா-வில் செய்த வேலை.. முதல் ராணுவ ஆக்ஷன்! | Pakistan Deploys Fighter Jets to Saudi Arabia – Amid Hosting US-Iran Ceasefire Talks in Islamabad

International

oi-Prasanna Venkatesh

பாகிஸ்தான் தலைமையில் நடந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை பெரும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என உலகமே அச்சத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில். இந்த பேச்சுவார்த்தையை நடத்திய பாகிஸ்தான் அடுத்தக்கட்ட போரில் முதலும் முக்கியமான ராணுவ நடவடிக்கையாக மேற்கொண்டுள்ளது.

2025 செப்டம்பரில் கையெழுத்தான பாகிஸ்தான் – சவுதி அரேபியா மத்தியிலான பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் கீழ் சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அரசு தனது போர் விமானங்கள் மற்றும் துணை விமானங்களை அனுப்பியுள்ளது. இதே நேரத்தில் தான் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது.

Pakistan Saudi Arabia Pakistan Saudi Fighter Jets 2025 Pakistan Saudi Defence Pact US Iran Talks Islamabad Pakistan Dual Diplomacy Shehbaz Sharif Riyadh Pact 2025 Pakistan deploys fighter jets Saudi Arabia first visible military move Pakistan Saudi 2025 mutual defence pact Pakistan Saudi King Abdulaziz Air Base jet landing Pakistan hosting US Iran ceasefire talks Islamabad balancing Riyadh Tehran Shehbaz Sharif Mohammed bin Salman pact symbolic deployment Pakistan Saudi risky gambit Pakistan Saudi alignment Iranian strikes Saudi targets Pakistan Pakistan defence obligations Saudi Arabia overlapping diplomatic military Pakistan collective defence agreement September 2025 Pakistan mediators US Iran negotiations regional security landscape Pakistan move 2025 2025

இந்த இரட்டை நடவடிக்கை பாகிஸ்தான் தன் உத்தியை இரு பக்கங்களிலும் சமநிலைப்படுத்த முயற்சிப்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதன் காரணமாகவே ஈரான் உடனான முக்கியமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை சேர்வு செய்தது என கேள்விகள் எழுந்தது.

பாதுகாப்பு ஒப்பந்தம்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் விமான தளத்தில் சனிக்கிழமை பாகிஸ்தான் போர் விமானங்கள் தரையிறங்கின. மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்ரகளையும் சவுதிக்கு அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் டான் செய்தியில் தெரிக்கப்பட்டு உள்ளது. இதேநேரத்தில் தான் பாகிஸ்தானில் ஈரான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.

2025 செப்டம்பரில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ரியாத் சென்றபோது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தபோது இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம்படி, ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் என்பது இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்பட்டு பாதுகாப்பு உதவிகளை செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் தான் சவுதி மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் தற்போது பாகிஸ்தான் தனது விமானங்களை அனுப்பியுள்ளது.

தற்போது ஈரான் – அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில் திட்டமிட்டுள்ள 2 வார போர் நிறுத்தம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமான என்ற எதிர்பார்பும் உருவாகியுள்ளது. இதற்கிடையில் தான் இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டு இருக்கும் போதே, போர் விமானங்களை சவுதிக்கு கொடுத்துள்ளது பாகிஸ்தான்.

பாதுகாப்பு வல்லுநர்கள் இந்க மூன்று விமானங்கள் ராணுவ ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். ஆனால் இது பாகிஸ்தான் தன் பாதுகாப்பு உடன்பாட்டுக்கு உண்மையாக இருப்பதை உலகுக்கு காட்டும் செயல் என்று அவர்கள் பார்க்கின்றனர். இன்னும் சிலர் ஆபத்தான சூதாட்டம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-deploys-fighter-jets-to-saudi-arabia-amid-hosting-us-iran-ceasefire-talks-in-islamabad-789255.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo