மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? | Smriti Mandhana: Discussions regarding the marriage of Smriti Mandhana and Palash Muchhal have resurfaced following a meeting at a restaurant in Mumbai

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: மும்பை உணவகம் ஒன்றில் நடந்த ஒரு சந்திப்பு காரணமாக மீண்டும் ஸ்மிருதி மந்தனா – பலஷ் முச்சல் திருமணம் குறித்த விவாதம் தொடங்கி இருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸிடம் பலஷ் முச்சல் சகோதரி ஆசீர்வாதம் பெறும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனால் இரு குடும்பங்களும் சமாதானமாகிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பலஷ் முச்சல் இருவருக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் இரவு பலஷ் முச்சலின் செயல்பாடுகள் காரணமாக, ஸ்மிருதி மந்தனா தனது திருமணத்தை ரத்து செய்தார். முதற்கட்டமாக ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

Smriti Mandhana

ஆனால் இரு வாரங்களில் ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாகவே திருமணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேபோல் பலஷ் முச்சல் மீது பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இருப்பினும் ஸ்மிருதி மந்தனா வழக்கம் போல் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பினார்.

இதனிடையே திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு பலஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்ததாக சொல்லப்பட்டது. அப்போது ஸ்மிருதி மந்தனாவிடம் கையும் களவுமாக பலஷ் முச்சல் சிக்கிக் கொண்டதாகவும், அவரை சக இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் அடி துவைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மும்பை உணவகம் ஒன்றில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பலஷ் முச்சலின் சகோதரி பலக் முச்சல் மற்றும் அவரது கணவர் மிதுன் இருவரும் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸிடம் காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

இதனால் பலஷ் முச்சல் மற்றும் ஸ்மிருதி மந்தனா குடும்பத்தினர் இடையில் சமாதானம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் ஸ்மிருதி மந்தனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த திருமணம் ரத்து செய்யப்பட்ட போது, பலஷ் முச்சலுக்கு ஆதரவாக இருந்தவர் அவரின் சகோதரி பலக் முச்சல் தான். இதனால் மீண்டும் திருமணம் நடக்குமா என்ற விவாதமும் தொடங்கி இருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/smriti-mandhana-discussions-regarding-the-marriage-of-smriti-mandhana-and-palash-muchhal-have-resur-788777.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo