மொத்த ஐரோப்பாவும் முடங்கப்போகுது.. அடுத்தடுத்து அலறவிடும் ஈரான்.. கைவிரித்த கத்தாரால் ஷாக் தகவல் | Iran War: Gas Crunch starts in Transnistria region in europe due to Qatar stops LNG production

International

-Nantha Kumar R

லண்டன்: ஈரான் மீதான போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்என்ஜி கியாஸ் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பிய நாடுகள் கியாஸ் தட்டுப்பாட்டை நோக்கி செல்வதாகவும், இன்னும் சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் பலரும் அலறப்போவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

lng gas jpg 1772807219341 1772807219978

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நடவடிக்கை பல நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்த மத்திய கிழக்கு நாடுகளும் போர் பதற்றத்தில் உள்ளன. குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஈராக், அஜர்பைஜான், லெபனான், ஓமன் உள்பட பல நாடுகள் இந்த போரால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இந்தியா, சீனா மட்டுமின்றி பல நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரான் போர் என்பது மொத்த ஐரோப்பாவையும் இன்னும் சில நாட்களில் முடங்க வைக்க உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மால்டா பிராந்தியம்

அதாவது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக மால்டோவா உள்ளது. இந்த நாட்டில் இருந்து பிரிந்து தனி பிராந்தியமாக ட்ரான்ஸ்னிஸ்ட்ரியோ செயல்பட்டு வருகிறது. இது ரஷ்யாவின் ஆதரவு பகுதியாக உள்ளது. இங்கு ரஷ்ய மொழி பேசும் மக்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால் ரஷ்யாவிடம் இருந்து இலவசமாக எல்என்ஜி கியாஸ் வழங்கப்பட்டு வந்தது.

அதேபோல் ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் இருந்து குழாய் வழியாக கியாஸ் வாங்கி பணம் செலுத்தியது. ஆனால் உக்ரைன் போரை கண்டித்து ரஷ்யாவிடம் இருந்து கியாஸ் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து ட்ரானிஸ்ட்ரியோ பகுதி இலவசமாக கியாஸ் சப்ளையை பெற்று வந்தது. இங்கிருந்து மால்டோவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கியாஸ் பற்றாக்குறை

ஆனால் உக்ரைன் போர் காரணமாக கடந்த 2024ல் ‘காஸ்ப்ரோம்’ நிறுவனத்துடனான கியாஸ் சப்ளை ஒப்பந்த்தை நீட்டிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள், கத்தாரிடம் இருந்து எல்என்ஜி கியாஸை கப்பல்கள் வழியாக வாங்கி பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில் தான் தற்போது ட்ரான்ஸ்னிஸ்ட்ரியோவில் கியாஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே கியாஸ் விநியோகம் இருக்கும். அதன்பிறகு கியாஸ் சப்ளை இருக்காது என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

கட்டுப்பாடுகள் நிர்ணயம்

இதுபற்றி ட்ரான்ஸ்னிஸ்ட்ரியாவின் பொருளாதர மேம்பாட்டு அமைச்சகம், ”மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் கியாஸ் விநியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கியாஸ் இருப்பில் கடும் பற்றாக்குறை உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் பயன்பாட்டில் வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது”என கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனி டூ இங்கிலாந்து

இதனால் ட்ரான்ஸ்ட்ரியோ மட்டுமின்றி இன்னும் பல ஐரேப்பிய நாடுகளில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஜெர்மனியிலும் பிரச்சனை உள்ளது. இதனால் ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா முதல் இங்கிலாந்து வரை ஐரோப்பிய நாடுகள் பலரும் எல்என்ஜி கியாஸ் விலை உயர்வால் பெரியஅளவில் பாதிப்பை எதிர்கொள்ளும் என்கின்றனர்.

போரால் கைக்கொடுக்காத கத்தார்

இதன் பின்னணி என்னவென்றால் மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கத்தாரில் எல்என்ஜி கியாஸ் உற்பத்தி தடைப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் எல்என்ஜி சப்ளை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது உலகளவில் எல்என்ஜி கியாஸ் உற்பத்தியில் கத்தார் ஐந்தில் ஒரு பகுதியை கொண்டுள்ளது. கத்தாரில் உற்பத்தி நிறுத்தப்பட்டு சப்ளை தடைப்பட்டுள்ளதால் ஐரோப்பாவில் கியாஸ் விலையை கிடுகிடுவென உயர்த்தி உள்ளது. ஐரோப்பாவில் தற்போது கியாஸ் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இருப்பு குறைவாக உள்ளது.

இதனால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில நாட்கள் இந்த பிரச்சனை தொடரும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் எல்என்ஜி கியாஸ் தட்டுப்பாடு உச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல நாடுகளும் எல்என்ஜி கியாஸ் பற்றாக்குறையால் பாதிப்பை எதிர்கொள்ள தொடங்கி உள்ளன.

கியாஸ் இன்றி முடங்க வாய்ப்பு

அமெரிக்காவிடம் இருந்து இந்த கியாஸ் கிடைக்கும் என்றாலும் அதன் விலை அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து கியாஸ் வாங்கினாலும் விலைவாசியால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பாவில் மால்டோ உள்பட பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன. இதனால் அந்த நாடுகளால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஈரான் போர் தொடரும் பட்சத்தில் மொத்த ஐரோப்பாவும் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ளும். சில நாடுகள் கியாஸ் இன்றி முடங்கலாம் என வார்னிங் செய்துள்ளனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-gas-crunch-starts-in-transnistria-region-in-europe-due-to-qatar-stops-lng-production-011-779179.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo