
International
oi-Shyamsundar I
டெஹ்ரான்: “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நண்பர்களுக்கு இங்கே இடமில்லை” என கறார் காட்டியிருக்கிறது ஈரான். பிரதமர் மோடியின் கோரிக்கையை அந்நாட்டு அதிபர் நிராகரித்ததாக வெளியாகும் தகவல்கள் டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை. பிரதமர் மோடியின் கோரிக்கையை அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்துவிட்டதாக ஈரான் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது.

குழப்பமான 24 மணிநேரம்!
கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம், “இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துவிட்டது” என இந்தியத் தரப்பில் சில தகவல்கள் கசிந்தன. அதேபோல் ஒரு கப்பலும கூட மும்பை வந்தது. ஆனால், சில மணி நேரங்களிலேயே “இது வெறும் வதந்தி” என ஈரான் ஊடகங்கள் முற்றுப்புள்ளி வைத்தன. அதன்பின்னர்தான் அந்த கப்பல்.. ஏற்கனவே ரேடாரை ஆப் செய்துவிட்டு கோஸ்ட் மோடில் வந்த கப்பல் என்று தெரிய வந்தது. அனுமதி கிடைத்த காரணத்தால் அந்த கப்பல் வரவில்லை என்பது உறுதியானது.
மூடப்பட்ட ஜலசந்தி
இதனைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் (Supreme Leader) ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவின் பேரில் ஹார்முஸ் ஜலசந்தி அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்படவில்லை. நேற்று புதிய உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி இதை அதிகாரபூர்வமாக மூடுவதாக அறிவித்தார். இதனால் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் 30 இந்தியக் கப்பல்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்தது.
மோடியின் தொலைபேசி அழைப்பு:
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அதேபோல் ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி உடனும் பேசினார். அப்போது, “இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) மற்றும் அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். சரக்குக் கப்பல்களைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
மோடி வைத்த கோரிக்கை – ஈரானின் ‘நோ’:
ஆனால், ஈரானிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை. பிரதமர் மோடியின் கோரிக்கையை அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்துவிட்டதாக ஈரான் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
“எங்கள் கொள்கை மிகத் தெளிவானது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளாகச் செயல்படும் நாடுகளுக்கு இந்த ஜலசந்தியில் அனுமதி கிடையாது. குறிப்பாக, சமீபத்திய துரோகங்களுக்குப் பிறகு இந்தியா போன்ற நாடுகளுக்கு வழிவிட முடியாது”
என ஈரான் தரப்பு கறார் காட்டியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
அடுத்தது என்ன?
ஈரானின் இந்தத் திடீர் நிலைப்பாட்டினால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மாற்று வழிகளில் எண்ணெய் வாங்க இந்தியா முயற்சித்து வரும் வேளையில், கடல் வழிப் போக்குவரத்து முடக்கம் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-shuts-strait-of-hormuz-for-india-too-pm-modi-phone-call-with-iran-leaders-failed-780901.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
