
International
oi-Halley Karthik
குவைத்: போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து, முடிவெடுக்க ஈரானுக்கு நாளை அதிகாலை 5.30 மணி வரை காலக்கெடுவை அமெரிக்கா விதித்திருந்தது. இந்த கெடு முடிய இருக்கும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தலாம் என சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், குவைத் மக்கள் இரவு வெளியே வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 6:00 மணி வரை (GMT நேரப்படி இன்று இரவு 9:00 முதல் புதன் அதிகாலை 3:00 வரை) மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இந்த அறிவுறுத்தல் குவைத் வாழ் இந்தியர்களுக்கும் பொருந்தும்.

மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த முன்னெச்சரிக்கை?
அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு (அமெரிக்க நேரப்படி இரவு 8 மணி) முடிவடையும் தருவாயில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியுள்ள நிலையில், வான்பரப்பில் ஏவுகணைகள் அல்லது அவற்றின் சிதறல்கள் விழுவதைத் தவிர்க்க குவைத் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம்.
குவைத் ஈரானுக்கு மிக அருகில் அமைந்துள்ள நாடு என்பதால், அமெரிக்காவின் தாக்குதல்கள் அல்லது ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் நடக்கும்போது பாதுகாப்பு கருதி இந்த “தற்காலிக லாக்டவுன்” அறிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/kuwait-indians-alert-government-issues-midnight-stay-at-home-order-amidst-iran-israel-missile-war-787989.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
