
Business
oi-Prasanna Venkatesh
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. ஏப்ரல் 6ஆம் தேதி திங்கட்கிழமை, தேசிய பங்குச் சந்தையான தேசிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.72% வரை சரிந்து ரூ.1,300 என்ற குறைந்த நிலையைத் தொட்டது. அதேபோல் மும்பை பங்குச்சந்தை-யில் 4.13% வரை வீழ்ச்சி கண்டது.
இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு சுமார் 6% வரை சரிந்துள்ளது. இதன் விளைவாக, இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் மொத்த சந்தை மதிப்பு ரூ.18 லட்சம் கோடிக்கு கீழே தள்ளப்பட்டு தற்போது 17.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,290 அளவுக்கு குறைந்து, கடந்த ஒரு ஆண்டில் காணாத அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன பங்கு சரிவு என்பது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் பங்கு சரிவால் சென்செக்ஸ் குறியீட்டில் மட்டும் 279 புள்ளிகள் சரிவுக்கு காரணமாகியுள்ளது.
இன்று சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் மற்றும் சன் பார்மா பங்குகள் மட்டுமே சரிவை சந்தித்துள்ளது. மற்ற 28 நிறுவனங்களும் லாபத்தில் முடிந்தது. சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தக முடிவில் 787.30 புள்ளிகள் சரிந்து 74,106.85 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் அதிகம் சரிந்த பங்குகள் பட்டியலில் ரிலையன்ஸ் பங்கு 6வது இடத்தில் உள்ளது. இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக, உலக சந்தையில் எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது தான். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலரை கடந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை வைத்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்த விலை உயர்வால் பங்குசந்தையில் நெருக்கடியை சந்தித்துள்ளது. எண்ணெய் விலை உயர்வு, சுத்திகரிப்பு மார்ஜின்கள் மற்றும் எதிர்கால லாபத்திற்கான அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் பங்குகளை விற்க துவங்கியுள்ளனர். இதேபோல் மத்திய அரசு எரிபொருள் ஏற்றுமதிக்கு வரி விதிக்க துவங்கியுள்ளது.
பங்குசந்தை நிபுணர்கள் கருத்துப்படி, தற்போது ரிலையன்ஸ் பங்குகள் ரூ.1,260 அளவுக்கு அருகில் முக்கிய ஆதரவு (support level) பகுதியில் வர்த்தகம் செய்து வருகிறது, அதேபோல் 200 வார மூவிங் ஆவரேஜ் அளவில் வர்த்தகமாகி வருகிறது.
ஆனந்த் ராதி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜிகர் எஸ் பட்டேல் கூறுகையில், இந்த நிலை கடந்த காலங்களில் வலுவான ஆதரவாக இருந்துள்ளது. அடுத்த 3-4 வர்த்தக நாட்களில் பங்கு இந்த அளவுக்கு மேல் நிலைத்திருந்தால், குறுகிய காலத்தில் மீண்டும் உயர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
முதலீட்டாளர்களுக்கு சிக்னல்
தற்போதைய சரிவு, சந்தையின் நிலைத்தன்மை குறித்து முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உலகளாவிய காரணிகள் – எண்ணெய் விலை, மத்திய கிழக்கு மோதல் போன்றவை – இந்திய பங்குச் சந்தையையும் நேரடியாக பாதிக்கக்கூடும் என்பதற்கான உதாரணமாக இது அமைந்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/reliance-industries-shares-crash-6-in-two-days-wipe-out-over-1-lakh-crore-market-cap-as-crude-oil-787621.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
