
Business
oi-Prasanna Venkatesh
அமெரிக்க அரசு வெனிசுலா, கிரீன்லாந்து, ஈரான் என அடுத்தடுத்து போர் மற்றும் தாக்குதலில் கவனம் செலுத்தி வரும் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் கலைக்கிடமாக இருப்பாத தரவுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது அமெரிக்க முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி இறுதி மதிப்பீட்டில் 0.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார பகுப்பாய்வு துறை (BEA) வியாழக்கிழமை வெளியிட்ட இந்தத் தகவல், மூன்றாம் காலாண்டின் 4.4 சதவீத வளர்ச்சியிலிருந்து பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதை இந்த தரவுகள் காட்டுகிறது.

சந்தை கணிப்புகள் 0.7 சதவீதம் வரையில் குறையும் என முன்பே கணிக்கப்பட்ட நிலையில், அதைவிட குறைவான அளவை பதிவு செய்துள்ளது. இதனால் உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் 2026-ஐ மிகவும் பலவீனமான நிலையில் 2026ஆம் ஆண்டை தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.
டிசம்பர் காலாண்டே இப்படியிருக்கும் நிலையில் மார்ச் காலாண்டில் ருத்ரதாண்டம் ஆடிய டிரம்பால், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை ஏப்ரல் 30ஆம் தேதி பொருளாதார பகுப்பாய்வு துறை வெளியிட உள்ளது. இதை பார்க்க உலகமே எதிர்பார்த்து நிற்கிறது.
GDP வளர்ச்சி குறைய என்ன காரணம்?
அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தில் இருந்து வெறும் 0.5 சதவீதமாக குறைய முக்கிய காரணமாக இருந்தது தனியார் முதலீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி. அந்நாட்டில் வணிகத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை இது காட்டுகிறது. பொருளாதார கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை, உலக வர்த்தகப் பதற்றம் மற்றும் போர் பதற்றங்கள் ஆகியவை நிறுவனங்களை முதலீட்டை குறைக்க வைத்துள்ளன. இது பொருளாதாரத்தின் அடிப்படையை பாதித்துள்ளது.
தனியார் முதலீடு மற்றும் நுகர்வு மிதமான நிலை
அமெரிக்கப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் நுகர்வோர் செலவினம் பங்கு வகிக்கிறது. இந்தக் காலாண்டில் அமெரிக்க மக்களின் உண்மையான தனிப்பட்ட நுகர்வு செலவினம் 1.9 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. முந்தைய காலாண்டின் 3.5 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது பெரும் மந்தநிலையைக் காட்டுகிறது.
அமெரிக்காவின் உள்நாட்டு private domestic purchasers என்ற முக்கிய அளவுகோல் இந்தக் காலாண்டில் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. முந்தைய காலாண்டின் 4.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இது பெரும் வீழ்ச்சி. இந்த மாற்றம் ஒரு துறையில் மட்டும் அல்ல, பல துறைகளிலும் பரவலான மந்தநிலையை உறுதிப்படுத்துகிறது.
பெடரல் ரிசர்வு-க்கு புதிய சவால்
அக்டோபர்-நவம்பர் 2025 அரசு ஊழியர் பணிநீக்கம் காரணமாக இந்தத் தரவு வெளியீடு தாமதமானது. மேலும் ஈரான் மீதான போர் உள்ளிட்ட புவியியல் பதற்றங்கள் அதிகரிக்கும் முன் கிடைத்த இறுதி முழுமையான பொருளாதாரப் நிலைப்பாடு இது என்பதால், போர் மூலம் எவ்வளவு பாதிப்பு எதிர்கொண்டு உள்ளது என்பதை கணக்கிட இது சரியான நிலையாக இருக்கும்.
இது பெடரல் ரிசர்வ் உள்ளிட்ட அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் மந்தமான பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சமநிலையை உருவாக்கும் வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/us-q4-2025-gdp-growth-slumps-sharply-to-0-5-weak-private-investment-consumer-spending-signal-tr-788529.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
