வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! | Indians in Gulf Relieved as Iran Sends Peace Team to Pakistan

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு தூது குழுவை ஈரான் அனுப்பியிருக்கிறது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கத்திப்சாதே, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு ஈரான் தூதுக்குழு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் வளைகுடா வாழ் இந்தியர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

Indians

அமெரிக்க தூதுக்குழுவை துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வழிநடத்துவார் என்றும், ஈரான் தூதுக்குழுவை பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் வழிநடத்துவார் என்றும் கத்திப்சாதே தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையே பாகிஸ்தான் மூலம் இரவு முழுவதும் செய்திகள் பரிமாறப்பட்டதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஈரானின் தேசிய நலனுக்கு உட்பட்டவை என்றும், அவற்றை நிறைவேற்றுவதில் ஈரான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கத்திப்சாதே வலியுறுத்தினார்.

ஈரானை ஒட்டிய பகுதிகளில், அதாவது லெபனான் உட்பட போர் நிறுத்தம் வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், லெபனான் மீது இன்று இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதல், அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் என்று கத்திப்சாதே குற்றம்சாட்டியுள்ளார்.

“நீங்கள் போர் நிறுத்தத்தைக் கோர முடியாது. மறுபுறம் உங்கள் நட்பு நாடு படுகொலையைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா ஒன்று போரை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் போர் நிறுத்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை” என்று கத்திப்சாதே கடுமையாக அமெரிக்காவை சாடியுள்ளார். எது எப்படி இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஈரான் அமைதி குழுவை அனுப்பியிருப்பது சர்வதேச அளவில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை காலங்களில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தது. எனவே, இங்குள்ள இந்தியர்கள் அச்சமடைய வேண்டியதில்லை. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், போர் தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/indians-in-gulf-relieved-as-iran-sends-peace-team-to-pakistan-788539.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo