
International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாளத்தின் கோடாங் மாவட்டத்தில், இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தின் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால், ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

என்ன நடந்தது?
இன்று காலை 11.51 மணியளவில், 9N-ASQ பதிவு எண் கொண்ட ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் ஒன்று கோடாங் மாவட்டத்தில் தரையிறங்க முயன்றது. வயல்வெளியில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக, மீண்டும் மேலே எழும்பி, பின்னர் வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஒரு பயணி காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சடலம் மற்றும் 5 பயணிகளுடன் காத்மண்டுவில் இருந்து வந்த அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
எங்கிருந்து வந்த ஹெலிகாப்டர்?
கோடாங் மாவட்ட தலைமை அதிகாரி ரேகா கண்டேல் இது குறித்து கூறுகையில், “விளைநிலத்தில் தரையிறங்கும்போது ஹெலிகாப்டர் விழுந்தது. அதில் ஒரு சடலமும், 5 பயணிகளும் காத்மண்டுவில் இருந்து ஏற்றி வரப்பட்டனர். உயிர்ச்சேதம் எதுவும் பதிவாகவில்லை. மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார்.
யார் யார் காயம்?
விமானி சபின் தபா ஹெலிகாப்டரில் இருந்தார். காயமடைந்த பயணியை மீட்க, 9N-ANA பதிவு எண் கொண்ட மற்றொரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக ஏர் டைனாஸ்டி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
A helicopter 🚁 crash in Nepal’s Khotang district has shocked many — especially given the emotional circumstances of those onboard.
An Air Dynasty helicopter, flying from Kathmandu with five passengers from the same family, crashed during landing in Kepilasgadhi rural… pic.twitter.com/ZOB53AHc33
— Dharm (@dhram00) March 18, 2026
முதற்கட்ட விசாரணையில், தரையிறங்கும் போது ஏற்பட்ட பலத்த காற்று அல்லது தூசியின் தாக்கம் விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒரு பயணி மட்டுமே காயமடைந்தார். விமானி மற்றும் மற்ற 4 பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல்கள் கூறுகின்றன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/nepal-helicopter-crash-air-dynasty-vessel-goes-down-in-khotang-all-passengers-survive-782387.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
