
Business
oi-Vigneshkumar
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக நிற்காமல் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வந்த தங்கம் விலை, இப்போது சரிய ஆரம்பித்துள்ளது. இந்த மாபெரும் சரிவு பொதுமக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை இந்தளவுக்கு வரலாறு காணாத அளவுக்குச் சரிய என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஒரு பக்கம் ஈரான் போர் உக்கிரமடைந்து வருகிறது. இதனால் இன்னொரு பக்கம் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகிறது. இதுபோன்ற சூழல்களில் தங்கம் விலை உயர்ந்திருக்கவே வேண்டும். ஆனால், தங்கம் வெள்ளி விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி சில மணி நேரங்களிலேயே 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிரடியாகச் சரிந்தன.

தங்கம்
தங்கம் எப்போதுமே பாதுகாப்பான புகலிடமாகவே கருதப்படும். இதனால் போர் போன்ற சூழல்களில் தங்கம் விலை உயரவே செய்யும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாகத் தங்கம் விலை சரிந்துள்ளது. அதிலும் சாதாரண சரிவு இல்லை. மரண அடி விழுவது போலத் தொடர்ந்து சரிந்து வருகிறது. முக்கியமாகத் தங்கம் மற்றும் வெள்ளி ETFsகள் ஒரே நாளில் 9 சதவீதம் வரை குறைந்தன. இந்தத் திடீர் சரிவு பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் கிளப்புவதாகவே இருக்கிறது.
உலகின் ரிஸ்க் ரிவார்ட் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். போர் காரணமாக அமெரிக்காவின் 10 ஆண்டுக் கால டிரஷரி கடன் பத்திரங்களின் வருவாய் 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஏறினால் தான் லாபமே தவிர.. இல்லையென்றால் அதில் இருந்து 10 பைசா கூட வராது. அதாவது கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் மாதமாதம் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். ஆனால், தங்கத்தில் அது உயர்ந்தால் மட்டுமே லாபம். இல்லையென்றால் பணம் வராது. இதனால் தான் ஜீரோ லாபம் தரும் தங்கத்தை விட அரசுப் பத்திரங்களை பெரும் முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமாக மாறுகிறது.
டாலர்
மேலும், போரினால் அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது. தங்கம், வெள்ளி ஆகியவை டாலரைப் பொறுத்து மாறுபடும் என்பதால் பாதுகாப்பு முதலீடு என்ற ஈர்ப்பு குறைத்தது. இந்த இரு காரணங்களும் சேர்ந்து தான் முதலீட்டாளர்களைத் தங்கத்தை நோக்கித் தள்ளி வைத்துள்ளது. அதாவது, கடன் பத்திர வருவாயும் டாலரும் உயரும்போது, போர்ச் சூழலிலும் தங்கம், வெள்ளி விற்கப்படுகிறது.
அதேநேரம் சர்வதேச பங்குச்சந்தைகள் ஓரளவுக்கு நிலையாகவும், எண்ணெய் விலைகள் அதிகமாகவும் இருக்கும்போது உலோகங்கள் மட்டும் சரிவது, போரைத் தாண்டிய சில பிரச்சினைகளைக் காட்டுகிறது.. குறிப்பாக, ஃபியூச்சர்ஸ் மற்றும் ஈ.டி.எஃப் வர்த்தகங்களில் ஏற்படும் சிக்கல்கள், மார்ஜின் கால்கள் ஆகியவையும் இதன் முக்கியக் காரணங்களாகும் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும் போது, பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கை எவ்வளவு பலவீனமானது என்பதையே இது காட்டுகிறது.
என்ன சொல்கிறார்கள்
இது தொடர்பாக அனுபவம் வாய்ந்த சில டிரெடர்கள் கூறுகையில், “வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் விற்கப்படுகிறது. டேட்டாவை பார்த்தால் அது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரம் இதை வெறுமன டிரெண்ட என சொல்ல முடியாது. இது ஒரு கட்டாய கடன் குறைப்பு. 2 டிரில்லியன் டாலர் இழப்பு ஒரு மர்மம் அல்ல, அது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவாகவே தெரிகிறது. அமெரிக்காவின் 10 ஆண்டு டிரஷரில பாண்ட் மூன்று வாரங்களில் சுமார் 45 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்கத்தில் இருக்கும் தொகையை விற்றுவிட்டு முதலீட்டாளர்கள் டிரஷரி பக்கம் செல்வதாகவே தெரிகிறது” என்றார்.
அடுத்து என்ன
மேலும், இப்போது இருக்கும் டேட்டாவை வைத்துப் பார்க்கும்போது, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து மட்டும் தங்கம் அதிகம் விற்கப்படவில்லை. மாறாக ஒட்டுமொத்தமாக அனைத்து முதலீட்டாளர்களுமே தங்களிடம் இருக்கும் தங்கத்தில் ஒரு பகுதியை விற்கிறார்கள்.
அதாவது ஈரான் போரோடு சேர்ந்து அமெரிக்காவில் டிரஷரி பாண்ட் வட்டி விகிதம், டாலர் மதிப்பு உயர்வது, முதலீட்டாளர்கள் தங்கத்திற்குப் பதிலாக வருமானம் தரும் முதலீடுகளை நோக்கிச் செல்வது ஆகியவை சேர்ந்தே தங்கம் விலை சரியக் காரணமாக இருக்கிறது. எனவே, குறைந்தபட்சம் போர் தொடரும் வரை இந்த டிரெண்டும் தொடரும் என்றே தெரிகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/what-is-the-reason-for-gold-rate-fall-nearly-2-trillion-gold-silver-selloff-have-a-solid-logic-783757.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
