2 வாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ள காலியான அமெரிக்க ஆயுதங்கள்! ஸ்மார்ட்டாக விளையாடிய ஈரான்! | US Runs Low on Critical Munitions Amid Iran War; Stocks of Tomahawk, THAAD, and Patriot Missiles Near Depletion

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியிருக்கிறது. கடந்த 2 வாரத்தில் அமெரிக்க அதிக அளவில் குண்டு வீசியதால், தற்போது ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது.

அமெரிக்கா, கடந்த பல ஆண்டுகளாக சேமித்திருந்த ஆயுதங்கள், ஏவுகணைகளை வேகமாக காலி செய்து வருகிறது. ஒரு பக்கம் அதிக அளவில் பணம் செலவாகி வருகிறது. மறுபுறம், ஆயுத இருப்பும் காலியாகியிருப்பது அமெரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

US Runs Low on Critical Munitions Amid Iran War

ஈரானின் ஸ்மார்ட் மூவ்

அமெரிக்காவை நேரடியாக எதிர்ப்பது என்பது, மலையுடன் மோதுவதற்கு சமம். அந்நாட்டிடம் ஆயுதங்கள் அவ்வளவு இருக்கின்றன. கூடுதலாக செலவு செய்து ஆயுதங்களை உருவாக்கவும் அமெரிக்காவால் முடியும். எனவே, புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஈரான், அமெரிக்காவின் ஆயுத இருப்பை காலி செய்ய தொடங்கியிருக்கிறது. இப்படித்தன் அமெரிக்காவை பலவீனப்படுத்த முடியும். ஈரான் எதிர்பார்த்ததை போலவே அமெரிக்காவின் ஆயுத இருப்பு குறைந்திருப்பதை பைனான்சியல் டைம்ஸ் உறுதி செய்திருக்கிறது.

எப்படி இது நடந்தது?

ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை தடுப்பதில், அமெரிக்காவின் பாதுகாப்பு ஏவுகணைகள் பெருமளவு காலியாகியிருக்கின்றன. டொமாஹாக் ஏவுகணைகள், தாட் இன்டர்செப்டார்ஸ், பேட்ரியாட் ஏவுகணைகள் ஆகியவைதான் அமெரிக்காவின் முக்கியமான ஆயுதம். இது இப்போது குறைந்திருக்கிறது.

டொமாஹாக் ஏவுகணைகள்: இந்த ஏவுகணைகள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும். ஈரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த இந்த ஏவுகணைகளை அதிக அளவில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது.

தாட் இன்டர்செப்டார்ஸ்: பெயரில் இருப்பதை போலவே, இது இடைமறிப்பு ஏவுகணைகள்தான். ஈரான் அனுப்பும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை தாக்கி அழிக்க இந்த ஏவுகணைகள் ரொம்பவும் முக்கியம். ஆனால், இதன் உற்பத்தி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்ரியாட் ஏவுகணைகள்: இது குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரம் ஏவுகணைகளை தடுக்கும் பாதுகாப்பு அரண். இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை பயன்படுத்த இது ரொம்பவும் முக்கியம்.

பிரச்சனை என்ன?

இவை அனைத்தும் அதிநவீன ஆயுதங்கள். இதை தயாரிக்க மாதக்கணக்கிலும், ஆண்டு கணக்கிலும் ஆகும். ஆனால், போரில் ஒரே நாளில் இவை முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேவையான ஆயுதங்கள், தேவையான நேரத்தில் கிடைக்கவில்லை. இதில் உள்ள இன்னொரு பிரச்சனை என்னவெனில், ஏற்கெனவே உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிக ஆயுதங்களை விநியோகித்திருக்கிறது. இப்போது ஈரானுடன் நேரடி போரில் ஈடுபட்டிருப்பதால் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இஸ்ரேலை கைவிடும் அமெரிக்கா

ஈரான் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவுகிறது. இது அனைத்தும் விலை மலிவானது. ஆனால், இதை தடுக்க அமெரிக்கா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்துகிறது. இப்படியே ஆயுத கையிருப்பு காலியானால், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கைவிட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-runs-low-on-critical-munitions-amid-iran-war-stocks-of-tomahawk-thaad-and-patriot-missiles-nea-781387.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo