2020ல் ஒரு கோடிக்கு ‘இதை’ வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி | If you bought ₹1cr in CG Power (2020) would be ₹75cr today, SBI ₹6cr, Gold ₹4cr, and Nifty ₹3cr

Business

oi-Velmurugan P

சென்னை: 2020ல் நீங்கள் CG Power நிறுவனத்தின் பங்குகளை ஒரு கோடிக்கு வாங்கி போட்டியிருந்தால் உங்களுக்கு 75 கோடி கிடைத்திருக்கும்.. எஸ்பிஐ வங்கியின் பங்குகளை2020ம் ஆணடில் ஒரு கோடிக்கு வாங்கி போட்டிருந்தால் இன்று உங்களிடம் 6 கோடி கிடைத்திருக்கும்.. நிஃப்டி 50ல் போட்டிருந்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்பு, 3 கோடியாகியிருக்கும்.. தங்கத்தில் போட்டிருந்தால் உங்கள் ஒரு கோடி ரூபாய் முதலீடு இன்று சுமார் 3 கோடியே 91 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். இதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

பணத்தை வைத்து பணம் பண்ணும் வித்தை தெரிந்தவர்களே இன்று மிகப்பெரிய புத்திசாலிகளாகவும் , முதலீட்டாளர்களாகவும் இருக்கிறார்கள். 2015ம் ஆண்டு வரை சென்னையில் தனி வீடுகள் அதிகாகவே இருந்தது. ஆனால் இன்று தனி வீடு என்பது மிகப்பெரிய கோடீஸ்வர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று என்கிற அளவில் வளர்ந்துள்ளது. அந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு வளர்ந்துள்ளது.

If you bought 1cr in CG Power 2020 would be 75cr today SBI 6cr Gold 4cr and Nifty 3cr

நாம் பார்க்க போவது நிலத்தின் மதிப்பு பற்றி அல்ல.. பங்கு சந்தை முதலீடு பற்றி…2020 மார்ச் மாதத்தில் உங்களிடம் ஒரு கோடி இருந்திருந்தால், இன்று என்ன மதிப்பு மற்றும் என்ன லாபம் கிடைத்திருக்கும் என்பதை பார்ப்போம். இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 ஆண்டுகளில் (2020 முதல் 2026 வரை) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் இது பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள், பணத்தை தொலைக்கிறார்கள். சரியான முறையில் முயற்சி செய்பவர்கள் நன்கு சம்பாதிக்கிறார்கள். அதேநேரம் பங்கு சந்தையை பொறுத்தவரை முதலீட்டு அபாயம் உள்ள ஒன்று தான். எனினும் சில பங்குகள் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ள்ளது.

2020ல் நீங்கள் ₹1 கோடி முதலீடு செய்திருந்தால் இன்று எவ்வளவு ஆகியிருக்கும் என்பதன் தற்போதைய நிலவரம் (மார்ச் 2026 கணக்குப்படி) பார்ப்போம்.

1. CG Power – ஆச்சரியமான வளர்ச்சி

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் CG Power கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. அப்போது அதன் ஒரு பங்கின் விலை வெறும் ₹5 முதல் ₹10 வரை மட்டுமே இருந்தது. முருகப்பா குழுமம் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு, அதன் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இன்று அதன் விலை ₹700-க்கும் மேல் வர்த்தகமாகிறது. எனவே, 2020 மார்ச் மாதத்தில் (விலை ₹8 எனில்) ₹1 கோடி முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று சுமார் ₹70 முதல் ₹85 கோடியாக உயர்ந்திருக்கும். சராசரியாக 75 கோடி உங்களுக்கு கிடைத்திருக்கும்.

2. பாரத ஸ்டேட் வங்கி

2020 மார்ச் சமயத்தில் பாரத ஸ்டேட் பங்கின் விலை சுமார் ₹180 – ₹200 என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது மார்ச் 2026-ல் பாரத ஸ்டேட் பங்கின் விலை சுமார் ₹1,140 – ₹1,170 வரை உள்ளது. நீங்கள் அன்று ₹1 கோடி முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு இன்று சுமார் ₹6 கோடியாக உயர்ந்திருக்கும்.

2020 மார்ச் ‘கொரோனா’ சரிவின் போது நிஃப்டி 50 சுமார் 8,000 – 9,000 புள்ளிகளில் இருந்தது. தற்போது 2026-ல் நிஃப்டி 24,500 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இன்டெக்ஸில் மட்டும் முதலீடு செய்திருந்தால் உங்கள் ₹1 கோடி இன்று சுமார் ₹3 கோடியாக மாறியிருக்கும்.

4. தங்கம்

2020ல் மார்ச் மாதம் கொரோனா காலத்தில் தங்கம் விலை ஒரு சவரன் வெறும் 30 ஆயிரம் என்கிற அளவில் தான் இருந்தது. இன்று ஒரு சவரன் 1.20லட்சம் என்கிற அளவில் உயர்ந்து நிற்கிறது. ஒரு வேளை நீங்கள் ஒரு கோடிக்கு 2020 மார்ச் மாதம் தங்கம் வாங்கியிருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 4 கோடியாக இருந்திருக்கும்.

முக்கிய குறிப்பு:

பங்குச்சந்தையில் சரியான நேரத்தில் (குறிப்பாக 2020 சரிவின் போது) முதலீடு செய்தவர்களுக்கு இந்த லாபம் சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், CG Power போன்ற பங்குகள் “Turnaround Story” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நம்ப முடியாத திருப்புமுனை வகையைச் சேர்ந்தவை, எல்லா பங்குகளும் இவ்வளவு பெரிய வளர்ச்சியைத் தருவதில்லை. இது கடந்த காலத் தரவு மட்டுமே. எதிர்கால லாபத்திற்கு இது உத்தரவாதம் அல்ல. பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்காக இந்த கட்டுரை உருவாக்கப்படவில்லை.. கடந்த கால தரவுகளை கூறியுள்ளோம்.

தங்கம் எப்படி

பங்கு சந்தைகள் முதலீடு அபாயங்களுக்கு உள்பட்டவை. உங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்றால் செபியால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம் அல்லது நீங்களே சுயமாக முடிவெடுக்கலாம். அதேபோல் தங்கத்தை பொறுத்தவரை சரியான பொருளதார வளர்ச்சி உலக நாடுகளில் ஏற்படவில்லை. இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்தார்கள்.. அதேபோல் போர்களும் வந்தது. இதனால் தான் அசாத்தியமான விலை உயர்வு தங்கத்தில் ஏற்பட்டிருக்கிறது. தங்கமும் முதலீட்டு அபாயங்களுக்கு உள்பட்டது தான். இதில் வரும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாளி..

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/if-you-bought-1cr-in-cg-power-2020-would-be-75cr-today-sbi-6cr-gold-4cr-and-nifty-3cr-779251.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo