
International
oi-Halley Karthik
கொழும்பு: கடந்த 2022ல் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. இந்நிலையில், அதேபோன்ற பாதிப்பை தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணம் டிரம்ப்தான் என்று சொல்லப்படுகிறது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் 20% எண்ணெய் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் தடைபட்டுள்ளன.

பெட்ரோல், டீசலுக்கு கட்டுப்பாடு
இதனால் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இருந்தது போல, தற்போது மீண்டும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வாரத்திற்கு இருசக்கர வாகனங்களுக்கு 8 லிட்டர், ஆட்டோக்களுக்கு 20 லிட்டர், கார்களுக்கு 25 லிட்டர் என பெட்ரோல், டீசல் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு லீவு
போர் தொடங்கியதிலிருந்து இலங்கையில் எரிபொருள் விலை சுமார் 33% உயர்ந்துள்ளது. பேருந்து கட்டணங்கள் 12% மேல் அதிகரித்துள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உர இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொருட்களின் விலை 15% வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிபொருள் சேமிப்பு
தற்போதைய அதிபர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சலுகை விலையில் எரிபொருள் வாங்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருளை மட்டுமே சேமிக்க முடியும். இதை அதிகரிக்க புதிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
என்ன வித்தியாசம்?
திருகோணமலையில் உள்ள பழைய எண்ணெய் கிடங்குகளைப் புனரமைத்து பயன்படுத்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2022-ல் கோத்தபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, இலங்கையிடம் எரிபொருள் வாங்கப் பணம் (அந்நியச் செலாவணி) இல்லை. ஆனால், இப்போது அரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் போர் காரணமாக எரிபொருள் கப்பல்கள் வர முடியாத சூழல் நிலவுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/sri-lanka-fuel-rationing-returns-iran-us-war-sparks-33-hike-in-petrol-prices-and-qr-based-quotas-785065.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


