3வது ஓவரிலேயே சான்ட்னர் செய்த தவறு.. உஷாரான சஞ்சு சாம்சன்.. நியூசிலாந்து அணி எடுத்த மோசமான முடிவு! | Sanju Samson: New Zealand Captain Mitchell Santner lost the plot by using 4 bowlers for the first 4 overs against Sanju Samson in the Finals at T20 World Cup 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 3வது ஓவரில் எடுத்த தவறான முடிவு இந்திய அணிக்கு சாதகமாக மாறி இருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே தங்கள் மீதான அழுத்தத்தை குறைந்துகொண்டனர்.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி முதல் ஓவரை வீசினார்.

Sanju Samson

மேட் ஹென்றியின் பந்துகள் அதிகமாக ஸ்விங்காகும் என்பதால், சஞ்சு சாம்சன் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடினார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஃபிளாட் லெந்தில் ஒரு பந்து கிடைக்க, அதனை சஞ்சு சாம்சன் சிக்ஸர் ஆக்கினார். தொடர்ந்து 2வது ஓவரில் கிளென் பிலிப்ஸ் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அது அபிஷேக் சர்மாவுக்கு விரித்த வலையாக அமைந்தது.

இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா இருவருமே எந்த ரிஸ்கையும் எடுக்கவில்லை. அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இப்படியான சூழலில் மீண்டும் மேட் ஹென்றி அட்டாக்கில் வருவார் என்று நம்பப்பட்ட போது, திடீரென ஜேக்கப் டெஃபி அட்டாக்கில் வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா கூட்டணி 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்களை விளாசியது.

இப்போதாவது மேட் ஹென்றி அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ஃபெர்குசன் அட்டாக்கில் வந்தார். இந்த ஓவரை பயன்படுத்தி 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 24 ரன்களை குவித்தனர். முதல் 2 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட சூழலில், அடுத்த 2 ஓவர்களில் 39 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலமாக இரு தொடக்க வீரர்களும் நம்பிக்கை பெற்றனர்.

முதல் 4 ஓவர்களையும் வீசுவதற்கு 4 பவுலர்களை நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பயன்படுத்தி மிகப்பெரிய தவறாக மாறியது. ஏனென்றால் பிட்சில் தொடக்கத்தில் கிடைத்த கொஞ்சம் ஸ்விங்கும் மேட் ஹென்றிக்கு 5வது ஓவரில் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு எதிராக 3 இன்னிங்ஸில் ஆடியுள்ள ஹென்றி 2 முறை விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரை அட்டாக்கில் இருந்து வெளியேற்றியது மோசமான தவறாக அமைந்துள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-new-zealand-captain-mitchell-santner-lost-the-plot-by-using-4-bowlers-for-the-first-4-779697.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo