4வது போட்டியாக விக்கெட் எடுக்கலையா.. பும்ராவுக்கு வந்த சோதனை.. மும்பை அடிவாங்க இதுதான் காரணம்! | Bumrah: Jasprit Bumrah goes wicket less for the 4th consecutive time for Mumbai Indians in IPL 2026 which backfired in Wankhede stadium

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4வது போட்டியாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விக்கெட் எடுக்காதது பேசுபொருளாகி இருக்கிறது. பும்ராவை பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் விளையாடி வருவதால், மும்பை அணியின் மற்ற பவுலர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகின்றனர். இதுவே மும்பை அணியின் சொதப்பலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி பில் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை குவித்தது.

Bumrah

மும்பை அணி தரப்பில் போல்ட், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் மற்றும் சான்ட்னர் ஆகிய 4 பவுலர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். நட்சத்திர வீரர் பும்ரா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. 4 ஓவர்களை வீசிய பும்ரா 35 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். எகனாமிக்களாக பவுலிங் செய்திருந்தாலும், அவர் தொடர்ச்சியாக 4 போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.

இந்தப் போட்டியில் பும்ரா பவர் பிளேவில் 2 ஓவர்களை வீசினார். இந்த 2 ஓவர்களில் வெறும் 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் 17 மற்றும் 19 ஆகிய ஓவர்களை பும்ரா வீசினார். அந்த 2 ஓவர்களிலும் விக்கெட் கிடைக்கவில்லை. பும்ரா விக்கெட் வீழ்த்தாதது மற்ற மும்பை பவுலர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏனென்றால் பும்ராவை பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் ஆடி வருகின்றனர்.

இது தொடர்கதையாக மாறியுள்ளது. பும்ராவை எச்சரிக்கையுடன் விளையாடுவதால், மற்ற பவுலர்களிடம் தேவையான அதிரடியை வெளிப்படுத்த முடிகிறது. பும்ரா உருவாக்கும் அழுத்தத்தை அடுத்த சில ஓவர்களில் மற்ற பவுலர்களால் தக்க வைக்க முடியவில்லை. இதனால் மும்பை அணியின் பவுலிங் அட்டாக்கை பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்துவிடுகிறார்கள்.

இதனால் பும்ராவுக்கு இது சோதனை காலமாக அமைந்திருக்கிறது. இதனால் பும்ரா இப்படியான சிக்கலில் இருந்து எப்படி வெளிவருவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனை மும்பை அணியின் பவுலிங் கோச்சான லசித் மலிங்காவும் உணர்ந்தே இருக்கிறார். இதனால் பும்ரா விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/bumrah-jasprit-bumrah-goes-wicket-less-for-the-4th-consecutive-time-for-mumbai-indians-in-ipl-2026-789435.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo