
Cricket
oi-Vigneshkumar
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தானை எதிர்கொண்டது. இதில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் மறக்க வேண்டிய போட்டியாக இது அமைந்துள்ளது. இதற்கிடையே இதில் சிஎஸ்கே ஆட்டத்தை நக்கலடிக்கும் விதமாகவும் பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் விளையாடியது. கவுகாத்தியில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. தோனி காயம் காரணமாக விலகியுள்ள சூழலில், அதிரடி வீரர் பிரேவிஸும் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

மீம்ஸ்
இருந்தாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் இறங்கிய சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிஎஸ்கே சொதப்பியது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் வெறும் 12.1 ஓவர்களில் 128 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதற்கிடையே இந்த போட்டியில் சிஎஸ்கே நக்கலடிக்கும் விதமாகவும் பல்வேறு மீம்ஸ்களை பார்க்க முடிகிறது.

ஜடேஜா
சிஎஸ்கே அணிக்காகப் பல போட்டிகளைத் தனி ஆளாக வென்று தந்துள்ள ஜடேஜா டிரேடில் ராஜஸ்தானுக்கு போனது அனைவருக்கும் தெரியும். இன்றைய தினம் சிஎஸ்கே தோல்விக்கு ஜடேஜாவின் பங்கும் இருந்தது. இன்று 3 ஓவர்கள் பந்து வீசிய அவர் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இத்தனை ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஜடேஜாவே சென்னை வீரர்களை இன்று திணறடித்ததைக் காட்டுகிறது இந்த மீம்.. ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் என சூப்பர் ஸ்டார் போட்டோவை வைத்து இந்த மீமை உருவாக்கியுள்ளனர்.
இந்த போட்டியில் 20 ஓவர்கள் கூட சிஎஸ்கே முழுமையாக பேட்டிங் செய்யவில்லை. 19.4 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தை நடையைக் கட்டிக் கொண்டு இருந்தனர். ஸ்கோர் போர்ட்டை பார்த்தாலே கடுப்பாகும் வகையில் இருப்பதாகச் சொல்கிறது இந்த மீம்!
இது தேவைதானா
கடந்தாண்டு சிஎஸ்கே அணியில் இருந்த ஹூடா, விஜய் சங்கர், திரிபாதி ஆகியோரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். அவர்கள் அதிரடியாக விளையாட தவறியதே கடந்தாண்டு சிஎஸ்கே தோல்விக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இன்றைய தினம் அதையும் மிஞ்சும் வகையில் சிஎஸ்கே பேட்டிங் இருந்த சூழலில், அதை மாஜி சென்னை வீரர்கள் பார்த்து நக்கலடிப்பது போல இருக்கிறது இந்த மீம்!
சின்ன பையன் கூட
5 டைம் ஐபிஎல் சாம்பியன் நாம் தான் எனச் சொன்னோம்.. ஆனால், சின்ன பையன் எல்லாம் நம்மைப் போட்டு அடிக்கிறீர்களா என்கிறது இந்த மீம்!
இந்த மீமிற்கு தனியாக விளக்கம் எல்லாம் தேவையில்லை. இன்றைய தினம் போட்டியில் என்ன நடந்தது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறது இந்த மீம்!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-csk-memes-chennai-faces-humiliating-defeat-against-rajasthan-royals-in-their-opening-match-785763.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
