
Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு உயிருக்கு ஆபத்தான வகையில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்தது எப்படி என்பது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்புக்கு வந்த முதல் சீசனிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நூலிழையில் பஞ்சாப் அணி வெற்றியை பறி கொடுத்தது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயரை ரசிகர்கள் பலரும் அதிகமாக ரசிக்க தொடங்கினார்கள்.

ஆனால் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் செய்த போது உயிருக்கு ஆபத்தான வகையில் காயம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வாரம் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவிலேயே ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், உயிர் தப்பினார். இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் சவால் நிறைந்த கிரிக்கெட் களத்திற்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
இதுதொடர்பாக ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், எந்தக் காயம் ஏற்பட்டாலும், கம்பேக் கொடுப்பது மிகவும் சவாலான விஷயம். அந்த காயத்தின் போது நான் 7 கிலோ எடை குறைந்துவிட்டேன். அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. பின்னர் 2 மாதங்களுக்கு பின் சரியான ஃபிட்னஸ்-க்கு வந்தேன். அந்த 7 கிலோ எடையை மீண்டும் அதிகரிப்பதற்குள் ஒரு பாடு பட்டுவிட்டேன்.
வாழ்க்கையில் சவாலான கால கட்டங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியான சவாலான நேரமாக அது அமைந்தது. அந்த சவாலை ஏற்று கடந்து வந்ததை பெருமையாக நினைக்கிறேன். அதேபோல் காயத்திற்கு பின் மீண்டும் இந்திய அணிக்காக ஆடியது மகிழ்ச்சி. பஞ்சாப் அணி மீது இம்முறை அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ஐபிஎல் தொடரும் சவால் நிறைந்தது. ஒவ்வொரு முறை நாங்கள் களத்திற்குள் இறங்கும் போதும், வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இம்முறை எங்களின் இலக்கு கோப்பை தான். இந்த 2 மாதங்கள் வீரர்கள் அனைவருமே ஒரு குடும்பத்தை போல் இணைந்திருக்கும் காலம் என்றும் தெரிவித்துள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/shreyas-iyer-i-lost-7-kgs-during-the-injury-period-and-gaining-those-weight-needs-a-big-effort-says-783257.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
