7 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா.. ஈரான் உடனான சண்டையில் மொத்தமா போச்சு! | US Air Force Loses Seven Aircraft in Direct Conflict With Iran, CNN Reports

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: அமெரிக்காவின் விமானப்படை உலகின் மிக வலிமையானது என்று சொல்லப்பட்ட நிலையில், ஈரானுடனான சண்டையில், அமெரிக்கா தனது அதிநவீன 7 போர் விமானங்களை இழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்காவின் பலத்தை கேள்வி எழுப்பியிருக்கிறது.

சிஎன்என் செய்தி ஊடகம், அமெரிக்காவின் இழப்பை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் F-15 மற்றும் ஒரு A-10 என இரண்டு விமானங்களை அமெரிக்கா இழந்திருக்கிறது.

US Air Force

போர் தொடங்கிய சில நாட்களில், மார்ச் 2 அன்று, குவைத் வான் பாதுகாப்புப் படைகளால் மூன்று F-15 விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டன. நட்பு ரீதியிலான இந்தத் தாக்குதலில், 6 விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்த வாரத்தில், அந்த 3 விமானிகளும் ஈரான் மீதான தாக்குதல் பணிகளுக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்தார்.

மார்ச் 12 அன்று, ஈராக்கில் ஒரு KC-135 எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானம் விபத்துக்குள்ளாகி 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’யின்போது மற்றொரு விமானத்துடன் டேங்கர் விமானம் விபத்தில் சிக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறியது. இரண்டாவது விமானம் எவ்விதப் பிரச்சினையும் இன்றி தரையிறங்கியது.

மார்ச் 27 அன்று, சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தின் மீதான ஈரானியத் தாக்குதலின்போது, தரையில் நின்றிருந்த E-3 சென்ட்ரி வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்தனர்; உயிரிழப்புகள் இல்லை. அமெரிக்க விமானப்படையின் ஒரு டேங்கர் விமானமும் இதில் சேதமடைந்ததாக சொல்லப்பட்டது.

கடந்த மாதம், ஈரானியத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க F-35 போர் விமானம், மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டியதாயிற்று. இப்படியாக மொத்தம் 7 விமானங்களை அமெரிக்கா இழந்திருக்கிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-air-force-loses-seven-aircraft-in-direct-conflict-with-iran-cnn-reports-787197.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo