அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? | Iran will stop attacking neighbors unless they are used to launch strikes, says Prsident masoud Pezeshkian

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பிற அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ஈரான் நாட்டின் அதிபர் மசூத் பெசேஷ்கியான் அறிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் இருக்கும் போர் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், ஈராக் உள்பட பல நாடுகளை ஈரான் தாக்கியது. இந்த நாடுகளின் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் இருப்பதால் அங்கிருந்து தாக்கலாம் என்ற அச்சத்தில் ஈரான் ஏவுகணை, ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியது.

iran-will-stop-attacking-neighbors-unless-they-are-used-to-launch-strikes-says-prsident-masoud-peze

இதனால் ஈரானில் தொடங்கிய போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் ஈரான் மீது எந்த நாடுகளும்பதில் தாக்குதல் நடத்தவில்லை. ஈரான் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அரபு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தான் அண்டை நாடுகள் மீது இனி ஈரான் தாக்குதல் நடத்தாது என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் அந்த நாட்டின் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ”எங்களால் தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இதனால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நாங்கள் ஒருபோதும் அண்டை நாடுகளை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை. அமைதியையும், பிராந்திய ஒற்றுமையையும் தான் நாங்கள் விரும்புகிறோம்.

ஈரானை தாக்க தங்களின் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதி வழங்காத அண்டை நாடுகள் மீது நாங்கள் இனி தாக்குதல் நடத்தமாட்டோம். இந்த முடிவை இடைக்கால தலைமை கவுன்சில் எடுத்துள்ளது. இதனால். இனி ஈரானில் இருந்து அண்டை நாடுகளை நோக்கி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படாது.

ஈரான் சரணயடைய வேண்டும் என்று எதிரிகள் விரும்புகின்றனர். இந்த விருப்பம் நிறைவேறாது. இதனை எதிரிகள் தங்களின் கல்லறை வரை எடுத்து செல்ல வேண்டியிருக்கும்” என்றார். இதன்மூலம் ஈரான் தனது அண்டை நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தாது என்பதை அறிவித்துள்ளது. இதன்மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தணிய வாய்ப்புள்ளது.

அதேவேளையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகின்றன. ஈரான் தற்போது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளதால் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட ‘அட்டாக்’கை குறைக்க வாய்ப்பு ஏற்படலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-will-stop-attacking-neighbors-unless-they-are-used-to-launch-strikes-says-prsident-masoud-peze-779325.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo