சிறுவனை கொன்று ரத்தம் குடித்த நபர்.. மூளையை விழுங்க முயன்ற கொடூரன்.. கேட்கும்போதே நடுங்குதே | Madhya Pradesh man eats brain and drinks blood after killed 16 year boy

India

oi-Nantha Kumar R

போபால்: சகோதரியை பார்க்க சென்ற 16 வயது சிறுவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொன்ற நபர் அவரது ரத்தத்தை குடித்து, மூளையை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது. மனைவியை கொன்று சிறை சென்று சமீபத்தில் தான் வெளியே வந்த அந்த கொடூரன் குறித்த திடுக்கிட வைக்கம் தகவல் வெளியாகி உள்ளது.

வடமாநிலங்களில் ‘ஹோலி பாய் தூஜ்’ என்ற சகோதரத்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் சகோதரிகள், தங்களின் சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி எடுப்பார். அதன்பிறகு சகோதரிகளுக்கு அவர்களின் அண்ணன், தம்பிகள் பரிசுகள் வழங்குவார்கள்.

madhya-pradesh-man-eats-brain-and-drinks-blood-after-killed-16-year-boy

அந்தவகையில் இந்த ஆண்டு ‘ஹோலி பாய் தூஜ்’ பண்டிகை கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் சாமனா கிராமத்தில் உள்ள சகோதரியை சந்திக்க 16 வயது நிரம்பிய பரத் விஸ்வகர்மா என்ற சிறுவன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பரத்துக்கு பின்னால் ஒருவர் வந்தார். அவரது பெயர் குட்டா படேல். திடீரென்று குட்டா படேல் தனது கையில் இருந்த சுத்தியலை எடுத்து பரத்தின் தலையில் அடித்தார். இதில் பரத் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்கா கட்டா படேல், சிறுவன் பரத்தை விடாமல் தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.

இந்த சமயத்தில் குட்டா படேல் அங்கிருந்து செல்லவில்லை. இறந்த சிறுவனின் தலையில் இருந்து கொட்டிய ரத்தத்தை குடித்தோடு, மூளையை எடுத்து வாயில் வைத்தார். இதற்கிடையே அங்கு வந்தவர்கள் குட்டாவின் செயலை பார்த்து அதிர்ந்து போயினர். அவர்கள் சத்தம் எழுப்பியதால் பயந்துபோன குட்டா படேல் அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து ஓடினார்.

இதையடுத்து அவரை விரட்டி சென்ற கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். போலீசாரிடம் குட்டா படேல் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். குட்டா படேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குட்டா படேல் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்ட்டு வெளியே வந்த குட்டா படேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தையே நடுங்க வைத்துள்ளது.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ”கொலை செய்யப்பட்டசிறுவனுக்கும், கொலை செய்த நபருக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை.சிறுவன் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவனை கொன்ற பிறகு ரத்தத்தை குடித்து மூளையை வாயில் வைத்து திங்க முயன்றதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/madhya-pradesh-man-eats-brain-and-drinks-blood-after-killed-16-year-boy-779379.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo