
International
oi-Halley Karthik
அமான்: அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்யும் மத்திய கிழக்கு நாடுகள் மீது, ஈரான் முழு வேகத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குததில், ஜோர்டானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அம்சமான ‘தாட்’ அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
‘தாட்’ என்பது அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும். உலகம் முழுவதும் மொத்தம் 9 இடங்களில்தான் இவை இருக்கின்றன. 7-ஐ அமெரிக்கா வைத்திருக்கிறது. மீதி 2 அரபு நாடுகளில் உள்ளது. இந்த இரண்டில் ஒன்றுதான் இன்று தாக்கப்பட்டிருக்கிறது. தாட் அமைப்பு 4 அடுக்குகளை கொண்டது.

1. லாஞ்சர்ஸ்
2. 1 ரேடார் (AN/TPY-2)
3. கட்டுப்பாட்டு மையம்
இதில், லாஞ்சர்ஸ் என்பது, ஏவுகணைகளை கொண்டிருக்கும். மொத்தம் 6 ஏவுதளங்கள் இருக்கும். இதில் ஒவ்வொன்றிலும் 8 ஏவுகணைகள் இருக்கும். மொத்தமாக 48 ஏவுகணைகள் இருக்கும்.
இரண்டாவது உள்ளதுதான் முக்கியமான மேட்டர். AN/TPY-2 இந்த ரேடார்தான் மொத்த அமைப்புக்கும் கண் போன்றது. சுமார் 1000 கி.மீ தொலைவிலிருந்து வரும் ஏவுகணைகளை கூட இதனால் கண்டுபிடித்துவிட முடியும். எனவேதான் இதனை கண் போன்றது என்று சொல்கிறார்கள். தற்போது ஜோர்டான் அருகே வைக்கப்பட்டிருந்த AN/TPY-2 ரேடாரைத்தான் ஈரான் தாக்கி அழித்திருக்கிறது.
வளைகுடா நாடுகளில் உள்ள, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு சாதனங்களை அடித்து காலி செய்வதுதான் ஈரானின் முதன்மையான பணியாக இருக்கிறது. எனவேதான் இந்த ரேடாரை காலி செய்திருக்கிறது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பில் 50% அளவுக்கு ஓட்டை விழுந்திருக்கிறது. இந்த ரேடாரின் விலை ரூ.2,500 கோடி.
இதனால் அச்சமடைந்த டிரம்ப், தென் கொரியாவிலும், இந்தோனேசியாவுக்கு பக்கத்தில் உள்ள குவாம் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 தாட் பாதுகாப்பு அம்சங்களை, உடனடியாக வளைகுடா பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதனால் ஆசியா பகுதியில் அமெரிக்கா தனது பிடியை தளர்த்துகிறது. இந்த அமைப்புகளும் சேதமடைந்தால், அமெரிக்காவின் மொத்த பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-thaad-defense-crisis-global-inventory-plummets-as-trump-diverts-critical-missile-assets-779371.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
