எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் | Pakistan Mohammad Amir Keep On Targeting Indian Team, What Is His T20 World Cup Finals Prediction

Cricket

-Vigneshkumar

சென்னை: இன்று டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் நிலையில், இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்பது தொடர்பாகப் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மீண்டும் கருத்து கூறியுள்ளார். இந்தியா தோற்கும் எனச் சொன்ன அவர், அதற்கு வினோத காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். இப்படிக் கடந்த காலங்களில் அவர் சொன்ன தவறான கணிப்புகள் பற்றி நாம் பார்க்கலாம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இன்று உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டி நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், டி20 பைன்ல்ஸ் தொடர்பாகவும் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.

Pakistan Mohammad Amir Keep On Targeting Indian Team What Is His T20 World Cup Finals Prediction

மீண்டும் மீண்டும் அசிங்கப்பட்ட அமீர்

வழக்கம் போல அவர் பைனஸிலும் இந்தியாவுக்கு எதிராகவே கணித்துள்ளார். ஏற்கனவே, கடந்த முறை எல்லா போட்டிகளிலும் இந்தியா ஜெயிக்காது எனச் சொல்லி, வாங்கி கட்டிக் கொண்ட அமீர், இந்த முறையும் திமிராக நியூசிலாந்து அணியே வெல்லும்.. நியூசிலாந்து தனது முதல் டி20 உலகக் கோப்பையை வெல்லும் எனக் கூறியிருக்கிறார். முன்னதாக சூப்பர் 8 சுற்றில் டாக்அவுட் போன்ற சூழலில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா எதிர்கொண்டது. அப்போதும் சரி, அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட போதும் சரி, இந்தியா தோற்கும் என்றே அமீர் சொல்லி இருந்தார்.

ஆனால், அமீர் முகத்தில் கரியை பூசும் விதமாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனாலும், மனம் தளராமல் மீண்டும் தனது கனிப்பைக் கொடுத்துள்ளார். நியூசிலாந்து அணியைப் போல ஒரு டீமாக இந்தியா சிறந்த அணியாக இல்லை என்றும் இதனால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அதிர்ஷ்டம் தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியா தோற்கும்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முழுமையான ஆட்டத்தை நியூசிலாந்து வெளிப்படுத்தியது. ஒரு அணியாக, தொடர்ச்சியாகச் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இந்தியாவைப் பார்த்தால், இரண்டு வீரர்கள் மட்டுமே வெற்றிக்குக் காரணமாக இருக்கிறார்கள். பும்ரா, சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே இந்திய அணி சார்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்களைத் தாண்டி இந்திய டீமில் யாரும் இல்லை” என்றார்.

வினோத காரணம்

பும்ரா, சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இரு அணிகளையும் ஒப்பிடுகையில் நியூசிலாந்து சிறந்த ஃபார்மில் இருப்பதாக அமீர் கூறினார்.. அவர் மேலும், “நரேந்திர மோடி ஸ்டேடியம் நியூசிலாந்துக்குச் சாதகமாக இருக்கும். பந்துவீச்சில் இந்தியாவை விட நியூசிலாந்து சிறந்த ஃபார்மில் இருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை பும்ராவைத் தவிர வேறு யாரும் ஃபார்மில் இல்லை. வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா தடுமாறுகின்றனர். இதை நம்மால் பார்க்க முடிகிறது..

சர்ச்சை

இந்திய அணி ஒரு சில வீரர்களை மட்டுமே களமிறங்குவது எந்தளவுக்குச் சரியாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், நியூசிலாந்து அணியிடம் ஒட்டுமொத்தமாக ஒரு டீமாக சிறப்பாக உள்ளது. இரு அணிகளிலும் சமமான பேட்டிங், சிறந்த வீரர்களும் உள்ளனர். இருப்பினும், நியூசிலாந்தின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இந்திய அணி பும்ராவை மட்டுமே சார்ந்திருக்கிறது. எனவே, நியூசிலாந்து தான் வெல்லும். இதுவே எனது கணிப்பு” என்று அவர் தெரிவித்தார்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கம் முதலே, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவை அமீர் கடுமையாக விமர்சித்து வருகிறார். அபிஷேக் எல்லா போட்டிகளிலும் ஒரே மாதிரி விளையாடுவதாகச் சாடியுள்ளார். நிலைமையை உணர்ந்து விளையாடத் தவறுவதாகவும், ஒரு மாதிரி ஆடி அவுட் ஆகிறார் என்றும் அவர் கூறுகிறார்..

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/pakistan-mohammad-amir-keep-on-targeting-indian-team-what-is-his-t20-world-cup-finals-prediction-011-779631.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo