
Cricket
oi-Mani Singh S
சென்னை: 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மூன்று போட்டிகளில் சேட்டன் சஞ்சு சாம்சன் இவ்வளவு அதிகாரத்துடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது உற்சாகமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டி.20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இன்று இந்தியா தட்டி சென்றது. இதோடு 3வது முறையாக டி.20 உலக கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது.

அதிரடி காட்டிய இந்திய அணி
இன்று டி.20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பைனல் குஜராத் மாநிலம் அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களும், இஷான் கிஷான் 54, அபிஷேக் சர்மா 52 ரன்கள் விளாசியிருந்தனர்.
256 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. ரன்கள் குவிக்க முடியால் திணறியது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. அது மட்டும் இன்றி இரண்டு முறை பைனலுக்கு வந்து கோப்பையை பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
“ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற #TeamIndia அணிக்கு வாழ்த்துக்கள். கடந்த மூன்று போட்டிகளில் சேட்டன் சஞ்சு சாம்சன் இவ்வளவு அதிகாரத்துடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது உற்சாகமாக இருந்தது, மிக முக்கியமான நேரங்களில் அது வழங்கியது.
போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தால் இந்தியா ஒரு மகத்தான வெற்றியைப் பெறவும், #T20WorldCup ஐ 3வது முறையாக உயர்த்திய பெருமைமிக்க தருணத்தைப் பெறவும் உதவிய அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Congratulations to #TeamIndia on a majestic victory over New Zealand in the final of the @ICC #T20WorldCup, reclaiming the crown and once again standing tall as world champions. 🇮🇳🏆
A triumph built on composure, skill, and collective belief-. #India delivered when it mattered… pic.twitter.com/p9xs4AipwD
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 8, 2026
எடப்பாடி பழனிசாமி
உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெக விஜய் வாழ்த்து
மீண்டும் சாம்பியன் !
இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை மீண்டும் கைப்பற்றியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மைதானத்தில் வீரர்கள் காட்டிய அசாதாரண போராட்ட மனப்பான்மை முதல் , அரங்கில் துடித்த கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்கள்வரை இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது.
CHAMPIONS AGAIN!
Huge congratulations to #TeamIndia on reclaiming the #T20I #World Cup! From the incredible grit on the field to the millions of hearts beating in the stands, this win is for every Indian.
My best wishes for your future endeavors!#T20WorldCup #MenInBlue… pic.twitter.com/PQC0z9cLdE
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2026
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று சாதனைகளை படைத்திருக்கிறது. போட்டியை நடந்திய எந்த நாடும் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை; எந்த அணியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டதில்லை; இதுவரை நடைபெற்ற 10 உலகக் கோப்பை டி20 போட்டிகளில் மூன்றாம் முறையாக கோப்பை வென்ற அணி ஆகியவை தான் அந்த மூன்று சாதனைகள் ஆகும்.
டி 20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருப்பது இந்தியர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்பதற்கு நாடு முழுவதும் நடைபெறும் உற்சாகக் கொண்டாட்டங்கள் தான் சான்று ஆகும். இந்த உற்சாகமும், கொண்டாட்டமும் தொடர வேண்டும்; மட்டைப் பந்து போட்டிகளில் இந்தியா மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/cm-stalin-congratulates-team-india-on-t20-world-cup-win-praises-sanju-samson-s-batting-779729.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
